தமிழக அரசியலில் திரையுலகை சார்ந்தவர்கள் வெற்றி பெற்று ஒரு புதிய மாற்றத்தை தந்துள்ள நிலையில் திரைத்துறையில் இருக்கும் பலரும் தற்போது அரசியலில் ஈடுபடலாமா என்று சிந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகரும் ,சிறந்த நடன மாஸ்டரும் ,இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தான் அரசியலுக்கு வருவதை குறித்த மக்களின் கருத்து கேட்டு ஒரு காணொளி பதிவை வெளியிட்டிருந்தார் . அரசியலுக்கு மக்கள் ஆதரவைக் கோரும் போது விஜய் உடனான தொடர்பு மற்றும் ரஜினிகாந்த் அறிவுரையையும் அவர் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது நண்பரான தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்சியில் இணைவது குறித்த மக்கள் கருத்துக்களைக் கேட்டிருந்தார். அந்த காணொளி வைரலாகி, பலரும் அவரை "வாருங்கள் அரசியலுக்கு" என்று வரவேற்ற நிலையில், அவர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சில விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.
சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலில் தனது நிலைப்பாடு மற்றும் தனது அரசியல் விருப்பமான தவெக கட்சி குறித்து அளித்த பேட்டி ஒன்றில், பொதுமக்களை "தெருநாய்களுடன்" ஒப்பிட்டுப் பேசியதாக கூறியது மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியது.
தமிழ்நாட்டின் புதிய அரசியல் சூழல் மற்றும் மக்கள் பற்றிய தனது பார்வையை அவர் விளக்கிய போது, "ஒரு புதிய வீட்டிற்குச் செல்லும்போது அங்கே இருக்கும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளவும், தெருநாய்களுக்குப் பிடித்த உணவை அளித்து அவற்றைப் பழக்கப்படுத்தவும் எப்படி நேரம் தேவைப்படுகிறதோ, அதேபோல்தான் புதிய அரசுக்கும் மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள காலம் தேவைப்படும்" என்ற அர்த்தத்தில் அவர் பேசியிருந்தார்.
மக்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசிய அவரது இந்த உவமை, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ராகவா லாரன்ஸ் பொதுமக்களை நாய்களுடன் ஒப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசியுள்ளார் என்று பல தரப்பினரும், அரசியல் விமர்சகர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.பொது மக்கள் முதல் பல்வேறு தரப்பினரும் ராகவா லாரன்ஸ் பேசியதை எதிர்த்துப் பதிவுகள் போட்டதைத் தொடர்ந்து அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் "மக்களை நாய்கள் என்று சொல்லும் அளவுக்கு நான் இரக்கமற்றவன் அல்ல" என விளக்கமளித்தார்.
எனது சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான ஒரு தவறான புரிதலைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது ரசிகர்களும் மக்களும் என் தாய்க்குச் சமமானவர்கள் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். நான் மக்களை நாய்கள் என்று குறிப்பிட்டதாகச் சிலர் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர், இது முற்றிலும் உண்மையற்றது மற்றும் தவறாக வழிநடத்துவதாகும்.எனது ரசிகர்களும் மக்களும் என் தாய்க்குச் சமமானவர்கள் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். நான் மக்களை நாய்கள் என்று குறிப்பிட்டதாகச் சிலர் பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர், இது முற்றிலும் உண்மையற்றது மற்றும் தவறாக வழிநடத்துவதாகும் எனக் குறிப்பிட்டு தன்னிலை விளக்கம் தந்தார்.
தான் யாரையும் நாய்களுடன் ஒப்பிடவில்லை என்றும், தனது கருத்துக்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மக்கள் அனைவரும் தனக்குத் தாய்க்குச் சமமானவர்கள் என்றும், தான் TVK கட்சியின் அரசியல் பயணந்தின் புதிய சூழலுக்கு எப்படிப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கவே அந்த உதாரணத்தைக் கூறியதாகவும் , தாம் எப்போதும் பொதுமக்களையும் தனது ரசிகர்களையும் உயர்வாக மதித்து வருவதாகவும் தன்னிலை விளக்கமளித்தார்.
இந்நிலையில் இன்னும் இந்த சர்ச்சை நீடித்து வருவதால் தற்போது ஒரு புதிய நீண்ட நேரம் பேசி எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் தனது சேவைகள் பற்றி பேசி விளக்கமளித்து இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறார்:
குறிப்பாக திருச்சி கிழக்குத் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தேர்தல் பற்றிய வதந்திகளை மறுத்தும் தனது *பென்ஸ்* திரைப்படப் பணிகள் மற்றும் தனது சமூகசேவை பணிகள் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் உடனடி அரசியல் பிரவேசம் இல்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.அதற்காக நான் அரசியலுக்கு வரப் போவதே இல்லை என கிடையாது. அவசரப்பட வேண்டாம், பொறுமையாக அடியெடுத்து வைப்போம். எங்கு நமக்கு நல்ல மரியாதை கிடைக்கும், யாருடன் சேர்ந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றெல்லாம் யோசித்து முடிவெடுப்பேன்.ஆசைக்காக அரசியலுக்கு வரமாட்டேன். மக்களுக்காக தான் அரசியலுக்கு வருவேன். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டேன். நான் அரசியலுக்கு வரவில்லை என நினைக்க வேண்டாம். திருச்சி கிழக்கில்தான் போட்டியிடமாட்டேன் என்றேன். வேறு எங்கும் போட்டியிடமாட்டேன் என்று கூறவில்லை
எல்லாரும் அன்பாக என்னைத் திருச்சிக் கிழக்குத் தொகுதியில் நிற்க சொல்லி அழைத்தீர்கள். அந்த அன்பிற்கு நன்றி. ஆனால், தர்மம் என்று ஒன்று உள்ளது.. நான் கட்சியில் சேர்ந்தவுடன் சீட் கிடைத்துவிட்டால் அந்த கட்சிக்காக உழைத்தவர்களின் நிலை என்னவாகும்?
விஜய்க்காக ஆரம்பம் முதல் உழைத்தவர்கள் பலர் தவெகவில் உள்ளனர்; முதல்வர் விஜய் யாரை நிற்க வைக்கிறாரோ அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெறுவார். ஏனென்றால் விஜய் சார் முகத்திற்குதானே ஓட்டு விழுகிறது. அங்கு நான் நிற்பது தர்மம் இல்லை.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய புதிய வீடு, தெருநாய் உவமையானது, எந்தவொரு புதிய அரசாங்கமும் கள யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு நிலைபெற நேரம் எடுக்கும் என்பதைப் பற்றியது மட்டுமே. அது மக்களை நாய்கள் என்று அழைப்பதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும், அவர் பொதுமக்களைத் தன் தாயைப் போல மதிக்கிறார் என்றும், யாரையும் அவமதிக்கும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்றும் வலியுறுத்துகிறார்.தான் கட்சியில் சேர்ந்தவுடன் பதவியைப் பெறும் ஆசை இல்லை எனவும், முதலில் கட்சியில் இணைந்து நான்கு வருடங்களாவது கட்சிப் பணிகளில் ஈடுபட்டு, அதன் பின்னே கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெற்றுப் பொறுப்புகளுக்கு வருவதே நல்லது; இதுதான் அறம் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.
மேலும், கட்சிக்கு வருவது குறித்து மக்களின் நலனுக்காகவே பாடுபடுவேன் எனவும், தனது சமூக சேவைக்கான உதவிகளை ஏற்கனவே கலைஞர் கருணாநிதியிடமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் பெற்றதாகக் கூறி, இப்போதுள்ள முதலமைச்சர் இன்னும் நிறைய செய்வார், அதற்கான கோரிக்கையை நான் முன்வைப்பேன் எனவும் கூறியுள்ளார்.
"திருச்சி கிழக்கில் போட்டியில்லை என்றாலும் முதல்வர் விஜய்கிட்ட ஒரே ஒரு ஹெல்ப் கேக்க போறேன். கலைஞர் அய்யா இருக்கும் போது ஒரு சில குழந்தைகளின் ஆபரேஷனுக்காக ஹெல்ப் கேட்டேன் அவர் பண்ணியிருக்காரு. அப்புறம் உதயநிதி சார்கிட்ட எங்க பசங்களுக்காக வாய்ப்பு கேட்டேன். அவரும் பண்ணினாரு. அன்புமணி ராமதாஸ் ஹெல்த் மினிஸ்டரா இருக்கும் போது அவரும் நிறைய பசங்களுக்கு ஆபரேஷன் பண்ண ஹெல்ப் பண்ணியிருக்காரு. நீங்களே நடிகரா இருக்கும் போது நான் கூட்டிட்டு வந்த குழந்தைக்கு சொந்த காசை போட்டு ஆபரேஷன் பண்ண ஹெல்ப் பண்ணீங்க. நடிகரா இருக்கும் போதே ஹெல்ப் பண்ணீங்க. இப்ப CM ஆயிட்டீங்க. உரிமையோட கேப்பேன். அதுல நியாயம் இருக்கு" என்றார்.
“உங்கள் கடமையைச் செய்யுங்கள். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காதீர்கள்.” என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தும் மக்களை தனது பேச்சு நோகடித்திருந்தால் அதை ஆறுதல்படுத்தும் வகையில் அவரால் காப்பாற்றப்பட்டு அவரது அரவணைப்பில் இருக்கும் மாற்றுத்திறன் கொண்ட இளைஞரான ராஜகோபால் என்பவரை பேச வைத்து ஒரு உணர்ச்சிகரமான தருணத்தை அவர் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.