பிரதமர் வேட்பாளராக கார்கே பெயர் பரிந்துரை: கோபத்தில் நிதிஷ்குமார்!

மல்லிகார்ஜூன கார்கே
மல்லிகார்ஜூன கார்கே
Published on

ந்தியா எதிர்க்க்ட்சி இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே பெயர் முன்மொழியப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இருவரின் உரையாடல் குறித்த முழு தகவல்கள் வெளியாகாத நிலையில், நடந்து முடிந்த எதிர்க்கட்சிக் கூட்டணிகள் கூட்டம் குறித்து இருவரும் உரையாடியிருக்கலாம் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி வட்டராங்கள் கூறுகையில், “இந்தியா எதிர்க்கட்சி  கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்மொழிந்தது தொடர்பாக காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து ராகுல் காந்தி நிதிஷ்குமாருக்கு விளக்கினார். இரண்டு தலைவர்களும் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் பலங்கள் குறித்தும் விவாதித்தனர்” என்று தெரிவித்தனர்.

இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் 4-வது கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை (டிச.19) மாலை நடைபெற்றது. இதில் முதல்வர்கள் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி,  ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப்பின் இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என முன்னர் கூறியிருந்த மம்தா பானர்ஜி, திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெயரை, இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என தமது விருப்பத்தை தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் இருந்து எப்போதும் விலகியிருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், இத்திட்டத்தை வழிமொழிந்தார். எதிர்க்கட்சி கூட்டணியில் மல்லிகார்ஜுன கார்கே முக்கியமான தலித் தலைவர் என்பதால், இந்த திட்டத்துக்கு இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள 12 தலைவர்கள் உடனடியாக ஒப்புதல் தெரிவித்தனர்.

இது சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, இத்திட்டத்துக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துவிட்டார். ‘‘நான் கீழ்தட்டு மக்களுக்காக பணியாற்றவே விரும்புகிறேன் என்றும், இந்தியா எதிர்க்கட்சி  கூட்டணி முதலில் வெற்றி பெற வேண்டும், வெற்றி பெறுவதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை எம்.பி.க்களை பெறுவதற்கு முன்பாக பிரதமர் வேட்பாளர் குறித்து ஆலோசிப்பதில் பயன் இல்லை’’ என கார்கே தெரிவித்திருந்தார்.

எனினும் மல்லிகார்ஜுன கார்கேயை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட விஷயம் பிகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எரிச்சலூட்டியதாகத் தெரிகிறது. மேலும் இது முன்கூட்டியே அவருக்கு தெரியாது என்று சொல்லப்படுகிறது. இதனால் அவரை சமாதானப்படுத்தும் நோக்கில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, நிதிஷ்குமாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com