தமிழகத்தில் பரப்புரை - தேதி ஒதுக்காமல் தவிர்க்கும் ராகுல் காந்தி..!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

தமிழகத்தில் இறுதிகட்டப் பிரச்சாரம் தீவிரமாகி, தேர்தல் பிரச்சாரம் ஓய இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ளது. 

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட பரப்புரையை தொடங்கிய நிலையிலும் இன்னும் காங்கிரஸ் தலைவர்கள் பரப்புரை செய்ய வரவில்லை. ராகுல், பிரியங்காவை தமிழகம் அழைத்து வருவதற்கு டெல்லியில் முகாமிட்டுள்ளனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஆர்வம் எதுவும் காட்டாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராகுல்காந்தி தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதால், தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, புதுச்சேரி தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே நாளில் பிரசாரத்திற்கு சென்றபோதும், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை. வெவ்வேறு நேரத்தில் பிரசாரம் செய்தனர். கேரள தேர்தல் பிரசாரத்திற்காக செல்ல, சென்னை மற்றும் கோவைக்கு ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வந்தபோதும்கூட பிரசாரம் எதுவும் மேற்கொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்:
வேலூரில் முதல்வரின் 'சர்ப்ரைஸ்' விசிட்: பேருந்தில் ஏறி மகளிரிடம் வாக்கு கேட்ட மு.க. ஸ்டாலின்..!
ராகுல் காந்தி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com