பாஜகவும் RSS-ம் அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானவர்கள்- ராகுல்காந்தி கடும் தாக்கு..!

Ragul gandhi - stalin
Ragul gandhi - stalin
Updated on

மகளிர் இட ஒதுக்கீட்டிற்குள் தொகுதி வரையறையை மறைத்து வைத்துள்ளதாக பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் தேசிய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி.

தற்போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரியில் திருவள்ளூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பரப்புரையில் பேசிய சில துளிகள் இங்கு

தமிழ்நாடு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழியை அழிக்க நினைக்கிறார்கள். டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள வசதியான கூட்டாளியை தேடுகிறது பாஜக..பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானவர்கள்.தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சிதான் இது.பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்று பாரம்பரியம் கொண்டது தமிழ்மொழி. கலாச்சாரத்தை பாதுகாப்பது ஒவ்வொரு மாநிலத்தின் உரிமை.

பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானவர்கள்.தமிழ் மொழியை அழிக்க நினைக்கிறார்கள். தமிழ்நாடு தமிழ் கலாச்சாரம் தமிழ் மொழியை அழிக்க ஆர் எஸ் எஸ் நினைக்கிறது.தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் போதெல்லாம் நான் தமிழனாக உணர்கிறேன். பாஜக தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்நாளில் தமிழையும் தமிழ் தமிழர்களின் தொட முடியாது.

சமூக நீதி என்றால் என்ன என்பதை ஒட்டுமொத்த தேசத்திற்கு காட்டியது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என மோடியும் அமித்ஷாவும் விரும்புகின்றனர். பாஜக - ஆர்எஸ்எஸ்-ஐ தமிழ்நாட்டிற்குள் விடக்கூடாது.

தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆள முடியும் என மோடி அமித்ஷா நினைக்கிறார்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழக மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.திமுகவை போல் மக்களுக்காக ஒரு காலத்தில் இருந்த கட்சிதான் அதிமுக. ஆனால் தற்போது பாஜகவின் முகமூடி. அதிமுக மற்றும் அதிமுக தலைவர்களை முழுமையாக கட்டுப்படுத்துகிறார் அமித்ஷா.

மேலும் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க இங்கு மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட உறுதியான ஆறு வாக்குறுதிகளை நான் தருகிறேன்.

நான் எங்கிருந்தாலும் தமிழ்நாட்டு மக்களோடு எப்போதும் சிறப்பான உறவை கொண்டிருப்பேன் என்று உறுதியுடன் வாக்குகளை சேகரித்தார் ராகுல்காந்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com