தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரவுள்ள ராகுல் காந்தி!

Rahul Gandhi
Rahul Gandhi Twitter
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் , இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. நீண்ட காலம் மிகவும் நெருக்கமாக இருந்த இந்த இரண்டு கட்சிகளும் , சட்டமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெற்றதிலிருந்து இணக்கமான சூழலில் இல்லை. தொகுதி உடன்பாடு காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் அதிக தொகுதிகளை திமுகவிடம் எதிர்பார்த்தது. ஆனால், திமுகவோ வெறும் 28 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் , தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி பலமுறை தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தி இதுவரை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வரவில்லை. இதனால், இந்தியா கூட்டணிக்குள் சரியான பிணைப்பு இல்லை என்று பேசப்பட்டது.

எப்படியாவது ராகுல் காந்தியை தமிழக பிரச்சாரத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பகிரத பிரயார்த்தனம் மேற்கொண்டனர். இறுதியாக ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு வர சம்மதித்தாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை , கோவை , தூத்துக்குடி ஆகிய இடங்களில் இவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. எப்படியும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ராகுலை மேடையேற்றி விட வேண்டும் என்று தமிழக காங் தலைவர்கள் மும்முரமாக உள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com