மஹாத்மா காந்தி போல ராகுல்! புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து!

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சுறுசுறுப்பாக இருப்பவர்கள் மட்டும் உழைப்பதற்கு வாருங்கள் ஹரியானா மாநிலத்தில் 8 டிகிரி குளிரில் நமது தலைவர் ராகுல் காந்தி டி-ஷர்ட்டில் நடந்து செல்கிறார் என நாராயண சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கட்சியின் அகில இந்திய செயலாளர் அனுமந்த ராவ் தலைமை ஏற்ற அந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சிறப்புரையாற்றினார்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து பூத்துக்களிலும் கிராமங்களிலும் இரண்டு மாதங்கள் மக்கள் சந்திப்பு நடைபயணம் மேற்கொள்ள கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்கள். அதன்படி ஜனவரி‌ 26 முதல் மார்ச் 25 வரை புதுச்சேரி முழுவதும் இரண்டு மாதங்கள் பாதயாத்திரை ஒரு நாளைக்கு 6 மணி நேரம் நடைபயணம் நடைபெறும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

Narayanaswsamy
Narayanaswsamy

நாராயணசாமி பேசுகையில் , ``முதலமைச்சர் ரங்கசாமியும், துணைநிலை ஆளுநர் தமிழிசையும் இணைந்து புதுச்சேரியை குட்டிச் சுவர் ஆக்கி வருகிறார்கள். அதனை மக்கள் மத்தியில் காங்கிரஸார் கொண்டு சொல்ல வேண்டும். இதைத்தான் ராகுல் காந்தி தனது பாத யாத்திரையில் செய்து வருகிறார்.

இனிமேல் வரும் எதிர்காலம் நான் போராட வேண்டிய காலம். காங்கிரஸ் கட்சிக்காக மாவட்ட செயலாளர்களும், வட்டார செயலாளர்களும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். கட்சிக்காக உழைக்காதவர்கள் வீட்டிலேயே உட்காருங்கள் என கட்டமாக கூறியுள்ளார்.

சுறுசுறுப்பாக இருப்பவர்கள் மட்டும் உழைப்பதற்கு வாருங்கள் ஹரியானா மாநிலத்தில் 8 டிகிரி குளிரில் நமது தலைவர் ராகுல் காந்தி டி-ஷர்ட்டில் நடந்து செல்கிறார். அதைப் பார்க்கும் பொழுது கண்ணீர் வருகிறது. அதுகுறித்து கேட்டால் இந்த பகுதி மக்களும், விவசாயிகளும் ஸ்வெட்டர் அணிந்து கொண்டா பணியாற்றுகிறார்கள் என்று கேட்கிறார். நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நாட்டு மக்களை ஒருங்கிணைத்து மதசார்பற்ற நாடு அமைக்க ராகுல் பாடுபடுகிறார். அவரைப்போல அடுத்த இரண்டு மாதங்களுக்கு 6 மணி நேரம் மக்களுக்காக நாம் நடப்போம்.

எப்படி மகாத்மா காந்தியடிகள் தன்னை வருத்திக்கொண்டு நாட்டுக்கு எப்படி பாடுபட்டாரோ அதே போல் ராகுல் காந்தி தன்னை வருத்திக் கொண்டு மக்களுக்காக பாடுபடுகிறார். இதனால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் நமது இலக்கு. நாடாளுமன்றத் தேர்தல் என்றாலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் நிற்க வேண்டும். இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற நம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com