ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மணிப்பூரில் ஒரு புதிய இந்தியாவை கட்டமைப்போம் - பிரதமர் பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி!

ண்மூடித்தனமாக எதிர்ப்பை வெளிக்காட்டும் எதிர்க்கட்சிகள், மோடி எதிர்ப்பு என்கிற ஒற்றை அஜெண்டாவை மட்டுமே வைத்து செயல்படுகின்றன என்று பிரதமர் பேச்சுக்கு டிவிட்டரில் ராகுல் காந்தி பதிலடி தந்திருக்கிறார்.

பிரதமரின் பேச்சு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள், அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள்தான் இந்தியா. மணிப்பூரில் அமைதியை கொண்டு வந்து, ஒரு புதிய இந்தியாவை கட்டமைப்போம் என்று தெரிவித்திருக்கிறார்

மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளும் செயல்படமுடியாத நிலை நீடிக்கிறது. பா..ஜ.க எம்பிக்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை பொருட்படுத்தவேண்டாம். 2024 இந்தியா என்கிற இலக்கை நோக்கி பணிகளை செய்வோம் என்று பேசியிருந்தார்.

இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, மணிப்பூரின் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்பட்டுள்ள காயங்கை போக்கி அவர்களது கண்ணீரை துடைப்போம். அமைதியும் சகோதரத்துவத்தையும் மணிப்பூரில் கொண்டு வருவோம். இந்தியா எனும் கருத்தாக்கத்தை மணிப்பூரில் மீட்டு ஒரு புதிய பாதையை வகுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் மீது கடுமையான விமர்சனத்தை வைத்திருப்பது பா.ஜ.க வட்டாரங்களையே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. மணிப்பூர் குறித்து பிரதமர் பேச மறுப்பதால் பா.ஜ.க அரசுக்கெதிராக எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.

பா.ஜ.கவுக்கு போதுமான ஆதரவு இருப்பதால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்படும். ஆனால், தீர்மானத்திற்கு பதிலளித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசவேண்டியிருக்கும். மணிப்பூரின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த தீர்மானம் என்பதால் பிரதமர் நிச்சயமாக பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பது எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com