
தெற்கு ரயில்வே துறையில் காலியாகவுள்ள 3518 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணியிடம் பெரம்பூர், கோயம்புத்தூர், சென்னை, பொன்மலை, மதுரை, பாலக்காடு, சேலம், திருச்சி, திருவனந்தபுரம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : தெற்கு ரயில்வே
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3518
பணி : அப்ரண்ட்டிஸ் (Apprentices)
ஆரம்ப நாள் : 25.08.2025
கடைசி நாள் : 25.09.2025
பணியின் பெயர்: Apprentices (அப்ரண்ட்டிஸ்)
சம்பளம்:
ஐடிஐ முடித்தவர்களுக்கு: மாதம் ₹7,000/-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற புதியவர்களுக்கு: மாதம் ₹6,000/-
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற புதியவர்களுக்கு: மாதம் ₹6,000/-
கல்வி தகுதி: தெற்கு ரயில்வே துறையில் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ (ITI) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது குறைந்தபட்சம் 15 ஆகவும், அதிகபட்சம் 24 ஆகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, பின்வரும் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு:
SC/ST: 5 ஆண்டுகள்
OBC: 3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS): 10 ஆண்டுகள்
PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
PwBD (OBC): 13 ஆண்டுகள்
முன்னாள் படைவீரர்கள்: அரசாங்கக் கொள்கையின்படி தளர்வு உண்டு.
தேர்வு செய்யும் முறை:
Merit List : விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
Document Verification : தகுதி பட்டியலில் இடம்பெறும் விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2025
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/Ex-Servicemen/PwBD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
கட்டண முறை: ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது:
தெற்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 25.08.2025 முதல் 25.09.2025 தேதிக்குள் https://sronline.etrpindia.com/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.