

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ரெயில்வே. மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரெயில்வே துறையில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைநிறைய சம்பளம், நிலையான வேலை மற்றும் பல்வேறு சலுகை போன்றவை வழங்கப்படுகிறது. இதன் காரணமாகயே ரெயில்வே வேலையில் சேர வேண்டும் என்ற ஆசையுடன் பல ஆயிரக்கணக்கானவர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக போட்டித் தேர்வுகளை ஆர்ஆர்பி (RRB) நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரெயில்வே தேர்வு வாரியம் (RRB) இந்திய ரெயில்வேயில் (Indian railway) செக்சன் கண்ட்ரோலர் (Section Controller)பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மொத்தம் 119 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பெங்களூருவில் 8 இடங்களும், சென்னையில் 9 இடங்களும், மும்பையில் 6 இடங்களும், செகந்திராபாத்தில் 5 இடங்களும், திருவனந்தபுரத்தில் 4 இடங்களும், பாட்னாவில் 6 இடங்களும், கொல்கத்தாவில் 8 இடங்களும், கோரக்பூரில் 5 இடங்களும் என மொத்தம் 119 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. எனவே இந்த பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: செக்ஷன் கன்ட்ரோலர் (Section Controller)
காலியிடங்களின் எண்ணிக்கை: 119
கல்வித் தகுதி: விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு (Degree)படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 20 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 (அடிப்படை சம்பளம்)
வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி (OBC)பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி (SC)மற்றும் எஸ்.டி (ST)பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பெண்கக்கு 40 வயது வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 38 வயது வரை விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் திறனாய்வுத் தேர்வு (CBAT) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்படும். கணினி வழித் தேர்வில் 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 2 மணி நேரம்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தியன் ரெயில்வேயில் section controller பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மூலமாக தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி : ஜூலை 15 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2026
விண்ணப்பக் கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு 400 ரூபாய் ரிட்டர்ன் செய்யப்படும்.
எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்கள்/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 250 தேர்வு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. தேர்வு எழுதிய பிறகு இவர்களுக்கு முழு கட்டணமும் ரிட்டர்ன் செய்யப்படும்.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.