ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு!

Rajasthan New CM BhajanLalSharma
Rajasthan New CM BhajanLalSharma

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வுச் செய்யப்பட்ட பஜன்லால் ஷர்மா, அம்மாநிலத்தின் முதல்வராகவும் தேர்வுச் செய்யப்பட்டு இருப்பது அரசியல் தளத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது. இதையடுத்து, முதல்வர் யார் என்ற கேள்வி கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

குறிப்பாக மாநிலத்தின் முதல்வராக மீண்டும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, எம்.பி.யாக இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாலக்நாத், ஜெய்பூர் ராணியும் எம்பியுமான தியா குமாரி ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டன.

இந்நிலையில், கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது. கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தாவ்டே, சரோக் பாண்டே ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், கட்சியின் சட்டப்பேரவை தலைவராக, அதாவது முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பஜன்லால் ஷர்மா, ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச் செயலாளராக பணியாற்றியவர். ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சங்கானெர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை தோற்டித்து முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்  ஆகிய மாநிலங்களில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. சத்தீஸ்கர் மற்றம் மத்தியப் பிரதேசங்களில் மூத்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களுக்கு பதிலாக புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சத்தீஸ்கரில் விஷ்னு தியோ சாயும், மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ம.பி. முதல்வராக மோகன் யாதவ் தேர்வு.. ஹிந்துத்துவா ஆதரவாளரான இவரின் பின்புலம் என்ன?
Rajasthan New CM BhajanLalSharma

அந்த வரிசையில், ராஜஸ்தான் முதல்வராகவும் புதிய முகமான பஜன்லால் ஷர்மா தேர்வாகி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com