ராஜதானி ரயில் உணவு; குவியும் புகார்கள்!

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்
ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்
Published on

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து தலைநகர் தில்லிக்கு இயக்கப்படும், ப்ரீமியம் கட்டணத்துடன் கூடிய ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும் இல்லை, போதுமானதாகவும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் உணவு வழங்கும் சேவையை மேம்படுத்த ரயில்வேத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு புகார் எழுந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களில், அதாவது கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை உணவின் தரம் சரியில்லை என்று 6,361 புகார்கள் வந்துள்ளனவாம்.

இதை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்திலேயே ஒப்புக் கொண்டுள்ளார். ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இயக்கப்படும் உணவு தயாரிக்கும் அறை மேம்படுத்தப்படும், உணவுகள் சரியான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் கேட்டரிங் பிரிவில் உணவுப் பொருள்கள் தரமாக இருக்கிறதா? உணவு தரமாக தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உணவுப் பொட்டலங்களில் க்யூ ஆர் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உணவு எங்கு தயாரிக்கப்பட்டது. எப்போது பேக் செய்யப்பட்டது, காலாவதி யாகும் தேதி, எடை உள்ளிட்ட தகவல்கள் அதில் தரப்பட்டிருக்கும். “பான்ட்ரி கார்” அதாவது கேட்டரிங் பெட்டியில் தூய்மை கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com