

தவெக கட்சியின் சார்பாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) நிர்வாகி ஆதவ் அர்ஜூனா ( Aadhav Arjuna) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) குறித்து பேசிய கருத்து அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.ரஜினிகாந்த் அரசியலில் கட்சி துவங்கும் திட்டத்தை கைவிட்டதற்க ஆளும் கட்சியான திமுக(DMK ) குடும்பத்திலிருந்து விடுத்த அழுத்தம் மற்றும் மிரட்டலே காரணமாக இருந்தது என்று அவர் கூறியிருந்தார்.அதே சமயம் தனது கட்சித் தலைவரான நடிகர் விஜய் ( Vijay) இது போன்ற எந்த அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் தைரியம் உள்ளவர் என்றும் இருவரையும் ஒப்பிட்டு பேசியதாக செய்திகள் வந்தது.
இந்த கருத்துக்கு திமுக மற்றும் பிற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.ரஜினிகாந்த் போன்ற மதிப்புக்குரிய நபரை பற்றி இப்படி பேசுவது தவறு என்று (AIADMK, BJP )அதிமுக பிஜேபி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதுவரை தனது கட்சியின் நிர்வாகியின் இந்த அவதூறு பேச்சுக்கு விஜய் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.
குறிப்பாக ரஜினிகாந்த் அரசியலில் வராததற்கு அரசியல் அழுத்தம் காரணம் என்றும் ஆனால் விஜய் அவரைவிட தைரியமானவர் என்றும் ஒப்பிட்டு பேசியது அரசியல் விவாதத்தை உருவாக்கியது.
இந்நிலையில் இதுவரை எவ்வித மறுப்புக் கருத்தும் வெளியிடாத ரஜினிகாந்த் இன்றுஅறிக்கை வெளிட்டு ஆதவ் அர்ஜுனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு ஜான் பாண்டியன், திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர்.என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்"
என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் தந்த எச்சரிக்கை அறிக்கையை அவரது ஆதரவாளர்கள் வரவேற்று மகிழ்கின்றனர்.