'மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்' ரஜினிகாந்த் உருக்கம்!

rajini kanth
rajini kanth

நேற்று மாரடைப்பால் காலமான நடிகர் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினிகாந்த் 'மயில்சாமியின் கடைசி ஆசையை நிறை வேற்றுவேன்' என தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் நடிகர் மயில்சாமி. இவரது மறைவினையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்களும் , திரையுலக நடிகர்களும் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார். பல்வேறு அரசியல் தலைவர்களும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் வீட்டில் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் இதனை தெரிவித்தார்.

”நானும் மயில்சாமியும் அடிக்கடி சந்திப்போம். அந்த சந்திப்பில் சினிமாவை பற்றி அதிகம் பேசவே மாட்டார். நான் சினிமா குறித்து கேட்டாலும் அவர் பேச மாட்டார். எம் ஜி ஆர் பற்றியும் சிவன் பற்றியும் தான் அவர் அதிகம் பேசுவார். நாங்கள் இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக படங்களில் நடிக்கவில்லை.

திருவண்ணாமலை நடைபெரும் கார்த்திகை தீபத்தில் மக்கள் கூட்டத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக என்னிடம் பேசுவார். சிவ ராத்தரி அன்று அவர் காலமானது தற்செபழக நடைபெற்றதாக நான் நினைக்கவில்லை. சிவனுடைய கணக்கு அது , அவரது பக்தனை அவர் அழைத்து கொண்டார். மயில்சாமி இறுதியாக சென்ற கோயிலில் பால் அபிஷேகம் செய்வேன். மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தீவிர சிவ பக்தனான நடிகர் மயில்சாமி நேற்று முன்தினம் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். பின்னர் வீடு திரும்பும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

அன்னாரின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது. தற்போது வரை இவரது மறைவிற்கு திரைபிரலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com