#BREAKING : காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் - விஜய் அறிவிப்பு..!

tvk vijay
tvk vijayimage credit-deccanchronicle.com
Updated on

தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் விஜய் தமிழகத்தின் ஒரு உயர்ந்த தலைவர் ஆவார்.ராஜ்ய சபா சீட் தொடர்பாக முதல்வர் விஜய் உடன் ஆலோசனை நடத்தப்படும். இது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். முதல்வர் விஜயும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரமும் நீண்ட நேரம் சந்தித்துப் பேசியதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என நேற்று கூறினார்.

இந்நிலையில், கிரிஷ் சோடங்கர், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சற்று முன் சந்தித்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், “முதலமைச்சர் விஜய்யிடம் ராஜ்யசபா இடம் கேட்டுள்ளோம். ராஜ்யசபா இடம் தொடர்பாக பரிசீலனை செய்வதாக முதலமைச்சர் தெரிவித்தாக கூறினார்.

இந்நிலையில்,தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 18ஆம் தேதி தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், கூட்டணி கட்சிகளுடனான நல்லுறவு மற்றும் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com