தலைமுறை காத்திருப்புக்குப் பின் அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில்: பிரதமர் மோடி!

PM Narendra Modi in Ayodhya
PM Narendra Modi in Ayodhya
Published on

யோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தில் பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணி அளவில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. ஸ்ரீராமருக்கு முதல் பூஜையை பிரதமர் மோடி செய்வித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் என ஆயிரக்கண்கானவர்கள் பங்கேற்றனர். எனினும் இந்த நிகழ்வுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி பங்கேற்கவில்லை.

“பால ராமர்” பிரதிஷ்டைக்குப் பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது ஸ்ரீராமர் இனி கூடாரத்தில் வாசம் செய்யமாட்டார். அவருக்கு என தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தலைமுறைகளின் காத்திருப்புக்குப் பிறகு இன்று நம் ராமர் வந்துவிட்டார். இந்த இனிய சந்தர்ப்பத்தில், அனைவருக்கும் வாழ்த்துக்கள். சொல்ல நிறைய இருக்கிறது ஆனால், என் தொண்டையில் ஒரு கட்டி இருக்கிறது. என்னால் சரியாக கூட பேசமுடியவில்லை.

ஜனவரி 22, 2024 என்பது ஒரு தேதி மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் வருகையைக் குறிக்கிறது. ராமர் இருப்பதற்கான சட்டப் போராட்டம் பல தசாப்தங்களாக நீடித்தது. நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது அரசியலமைப்பின் முதல் வசனத்தில் ராமர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால், இது நடக்க பல தசாப்தங்கள் ஆனது. அந்த அரசியலமைப்பு இறுதியாக அதன் குறிப்பிற்கு உண்மையாக உள்ளது. இன்று, நான் பகவான் ஸ்ரீ ராமனிடமும் மன்னிப்பு கேட்கிறேன். பல நூற்றாண்டுகளாக நம்மால் இப்பணியை செய்ய முடியாமல் போனதற்கு நமது முயற்சியிலும், தியாகத்திலும், தவத்திலும் ஏதோ குறை இருக்க வேண்டும். இன்று இப்பணி நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு பகவான் ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்.

சாகரிலிருந்து சரயு வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாகர் முதல் சரயு வரை  எங்கும் விழாக்கோலமாக இருந்தது. ராமரின் நாமம் உச்சரிக்கப்பட்டது. ராமர் நெருப்பு அல்ல, ராமர் ஆற்றல். ராமர் ஒரு சர்ச்சை அல்ல, ராமரே தீர்வு. ராமர் நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரியவர். ராமர் தற்போதையவர் அல்ல, ராமர் நித்தியமானவர் என்றார்.

முன்னதாக இன்று, அயோத்தியில் பால ராமர் சிலை 'பிராண பிரதிஷ்டை' விழா நடைபெற்றது, இது இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு 'தீபாவளி' போன்று இருந்தது. இராவணனுடனான போருக்குப் பிறகு ராமர் வீட்டிற்கு வந்ததைக் குறிப்பது போல் இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com