மேற்குவங்கத்தில் ராமநவமி வன்முறை: தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

மேற்குவங்கத்தில் ராமநவமி வன்முறை: தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
Published on

மேற்கு வங்க மாநிலம், ஹெளரா மாவட்டத்தில் ஷிவ்பூரி, ராமநவமி கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வுக்குழு விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை பரிசீலித்த தாற்காலிக தலைமை நீதிபதி டி.எஸ்.சிவ{னம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

இந்த வழக்கை மேற்கு வங்க போலீஸாரிடமிருந்து தேசிய புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்றி பெஞ்ச் உத்தரவிட்டது. முன்னதாக இந்த வன்முறையின்போது குண்டு வெடித்ததாக கூறப்படுவதால் தேசிய புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தனது மனுவில் சுவேந்து அதிகாரி கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் மாநில போலீஸார் மத்திய அரசிடம் இரண்டு வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். அதன்பின்னர் மத்திய அரசு அந்த ஆவணங்களை தேசிய புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ராமநவமி வன்முறைச் சம்பவங்கள் குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டால் அதுபற்றி விசாரணை நடத்த தயார் என்று கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி தேசிய புலனாய்வுக்குழு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், இந்த வழக்கில் கலவரத்தை தூண்டியது யார் என்பதை கண்டறிவது மாநில போலீசாரால் முடியாது என கருதுவதால் மத்திய புலனாய்வுக்குழு விசாரணை தேவை என்று கருதுவதாக கூறியிருந்தது.

இந்த மோதலை அடுத்து பதற்றம் நிறைந்த பகுதிகளில் இணையதளச் சேவைகள் தடை செய்யப்பட்டிருந்த்து குறித்து நீதிபதி சிவஞானம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். இதுபோன்ற மோதல்களின்போது இணையதளச் சேவைகள் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் வீட்டின் கூரை மேலிருந்து கற்களை வீசியது தொடர்பாக போலீஸ் புலனாய்வுத் துறையின் விசாரணை குறித்து டிவிஷன் பெஞ்ச் கேள்வி எழுப்பியிருந்தது. போலீஸார் இது விஷயத்தில் சரிவர புலனாய்வு செய்யத்தவறி விட்டதாகவும் கூறியிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com