ராமநாதபுரம் மேகவெடிப்பு: மேகவெடிப்பு என்றால் என்ன? அது எப்படி நிகழ்கிறது தெரியுமா?

Ramanadhapuram
Ramanadhapuram
Published on

ராமநாதபுரத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து இன்றும் கனமழை எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில் மேக வெடிப்பு எப்படி நிகழ்கிறது என்று பார்ப்போமா?

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்தவகையில் நேற்று ராமநாதபுரத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழைக் கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக 41 செமீ அளவு மழை பதிவானது. இதில் பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரையிலான 3 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 36 செமீ, தங்கச்சிமடத்தில் 27 செமீ, பாம்பனில் 19 செமீ, மண்டபத்தில் 13 செமீ மழை கொட்டித்தீர்த்துள்ளது. 

மேக வெடிப்பு என்றால் என்ன என்று பார்ப்போம்...

கனமான தண்ணீர் துளிகளுடன் ஒன்றுக்கூடி மேகங்கள் தவழ்ந்து வரும்போது, அதிலிருந்து துளிகள் விழாத வண்ணம், தரையிலிருந்து மேல் எழும் வெப்பம் தடுக்கும். இதனால் மேகத்திலிருந்து விழும் துளிகளை அப்படியே மேகத்திற்குள்ளேயே அந்த வெப்பக்காற்று அனுப்பும். இதனால் துளி துளியாய் மழை பெய்யாமல், மொத்தமாக அருவிபோல் மழைக் கொட்டும். இதன்முலம் 20 முதல் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு  ஏற்படும். இதனால், எளிதாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவையும் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்! எந்த விஷயத்தில்?
Ramanadhapuram

இந்த மேக வெடிப்புதான் நேற்று ராமநாதபுரத்தில் ஏற்பட்டு அதிகளவு மழை பெய்திருக்கிறது. இதனையடுத்து இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறதாம். மேலும் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்படுகிறது.

25ம் தேதி அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை,  ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழைப் பெய்யக்கூடும்.

மேலும் 26ம் தேதி அன்று டெல்டா, புதுக்கோட்டை, காரைக்கால், ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com