தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும்! தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும்! தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவிப்பு!
Published on

ஷாவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து நாளை தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும் என்று தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார்.

இன்று பிறை தென்பட்டது. இதனால் எதிர்பார்க்கப் பட்டது போலவே நாளை தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார்.

“ஹிஜ்ரி 1444 ரமலான் மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை, ஆங்கில மாதம் 21-04-2023 தேதி அன்று மாலை ஷாவ்வால் மாத பிறை நாகூர் மற்றும் பல்வேறு இடங்களில் காணப்பட்டது. ஆகையால் சனிக்கிழமை ஆங்கில மாதம் 22-04-2023 தேதி அன்று ஷாவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஈத் உல் ஃபித்ர் 22-04-2023 அன்று (சனிக்கிழமை) கொண்டாடப் படும் ” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மாதத்தில் ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே சிறந்த மாதமாகக் கருதப் படுகிறது. இந்த மாதத்தினை இறைவனை நெருங்கும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். மேலும் இறைவனால் உலகிற்கு குர்ஆன் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த ஆண்டு சில நாடுகளில் பிறை தெரிந்ததை அடுத்து ரம்ஜான் மாதம், மார்ச் 24 ம் தேதி துவங்கியது. இதனால் ரமலான் மாதம் ஏப்ரல் 21-ம் தேதியான இன்று நிறைவடைகிறது. இதையடுத்து பிறை தெரிந்தால், இஸ்லாமிய நாட்காட்டியின் பத்தாவது மாதமான ஷாவ்வால் மாதத்தின் துவக்க நாளான ஏப்ரல் 22ம் தேதியன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com