இன்று வெளியாகும் பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்!

இன்று வெளியாகும் பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல்!

பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது. பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிடுகிறார். இந்த தரவரிசை தொடர்பான புகார்களை வரும் 30-ஆம் தேதிவரை தெரிவிக்கலாம் என அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பிஇ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பதிவு கடந்த மாதம் 5-ஆம் தேதி முதல் கடந்த 4-ஆம் தேதிவரை நடைபெற்றது. இதில், 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் பதிவுசெய்தனர். அவர்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி உள்ளனர்.

மேலும், மாணவர்களுக்கான ரேண்டம் எண், ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிட உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்றது.

அதில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் விண்ணப்பக் கட்டணங்களுடன், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 20-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.

இணையதளம் வாயிலாக தரவரிசை பட்டியலை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தரவரிசை தொடர்பான புகார்களை ஜூன் 30-ஆம் தேதி வரை மாணவர்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 2-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com