கடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் மீட்கப்பட்ட ராப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்த்!

கடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் மீட்கப்பட்ட ராப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்த்!

துரையைச் சேர்ந்த பாப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து இசைக் கச்சேரி குழு ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இசைச் கச்சேரியை முடித்துவிட்டு, தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று கத்தி முனையில் அவரைக் கடத்திச் சென்று விட்டனர்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அவரது நண்பர்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், மதுரையில் தேவ் ஆனந்தின் அண்ணன் சிரஞ்சீவி சீட்டு நடத்தி, பல பேருக்குப் பணம் தராமல் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. பணத்தை இழந்தவர்களால் சிரஞ்சீவியை தொடர்புகொள்ள முடியாததால், அவர்கள் அவரைத் தேடி சென்னைக்கு வந்தார்கள். சென்னையில் சிரஞ்சீவியை காண முடியாததால், அவரது தம்பி தேவ் ஆனந்தை சந்தித்த அவர்கள், அவரைக் கடத்தி இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், திருவேற்காடு போலீசார் தனிப்படைகள் அமைத்து தேவ் ஆனந்தை கடத்திச் சென்ற மர்ம கும்பலைத் தேடி வந்தனர். அது மட்டுமின்றி, அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்துறைக்கும் தகவல் கொடுத்து அவரைத் தேடும் பணியில் மும்முரமாக இறங்கினர். அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே காவல்துறையினர் வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த இரண்டு கார்களை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது, அதில் ஒரு காரில் ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் இருப்பதை கண்டு போலீசார் அவரை மீட்டனர். மேலும், அவரோடு அவரைக் கடத்தி வந்த ஐந்து பேர் கும்பலையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக்கலைஞர் தேவ் ஆனந்தை, போலீசார் அடுத்த பத்து மணி நேரத்தில் கண்டுபிடித்து மீட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com