கொசுக்களை பழிவாங்க ஓர் அரிய வாய்ப்பு.

கொசுக்களை பழிவாங்க ஓர் அரிய வாய்ப்பு.

கொசுக்களின் விந்தணுக்களை செயலிழக்கச் செய்வதன் மூலம் இனப்பெருக்கத்தை தடுக்க முடியும் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 

உலகிலேயே மனிதர்களை அதிகம் துன்புறுத்தும் ஒரே விலங்கு எதுவென்றால் அது கொசுக்கள் தான். கொசுக்களினால் தான் அதிகபடியாக மக்கள் இறக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் நபர்கள் கொசுக்கள் பரப்பும் நோய் களினால் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியின் படி, நம்மைத் துன்புறுத்தும் கொசுக்களை பழிவாங்க அதன் விந்தணுக்களை செயலிழக்கச் செய்ய முடியும் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.  

Culex வகையைச் சேர்ந்த கொசுவின் விந்தணுக்களில் உள்ள புரதங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் விவரித்துள்ளதை, PLOS One இதழானது வெளியிட்டிருந்தது. இந்த வகை கொசுக்கள் தான் மனிதர்களை கொல்லும் 'வெஸ்ட் நைல் ரிவர் வைரஸ்', Brain Swelling Encephalitis போன்ற பயங்கரமான வைரஸ் நோய்களைப் பரப்புகின்றன. இந்த ஆய்வின்படி கொசுக்களின் விந்தணுக்களை செயல்படச் செய்யும் புரதங்களை செயலிழக்க வைப்பதால், அதன் கருவுறுதலை தடுக்க முடியும் என்கிறார்கள். 

கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும்போது அவைகளின் வால்களைக் கொண்டுதான் இணைகின்றன. ஆண் கொசுவானது தன்னுடைய விந்தணுக்களை பெண் கொசுவிற்கு மாற்றுகிறது. பின்னர் விந்தணுக்கள் நகர்ந்து சென்று கருமுட்டையாக உருவாகின்றன. ஆண் கொசுவின் விந்து வெளியேறும் போது சுரக்கும் ஒருவித புரதம், அந்த விந்தணுக்கள் பெண் கொசுவின் கருப்பையினுள் நகர்ந்து செல்ல உதவுகிறது. 

இந்த புரதத்தின் உதவி இல்லாமல், விந்தணுவால் நகர்ந்து சென்று கருமுட்டையை ஊடுருவ முடியாது. எனவே இந்த புரதத்தை செயலிழக்கச் செய்வது மூலமாக, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்தாலும் கருமுட்டையானது நகர்ந்து செல்ல முடியாமல் சிறிது நேரம் கழித்து சிதைந்து கரைந்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 

மக்களே, கொசுக்களின் விந்தணுக்களைப் பற்றி படிப்பது அவ்வளவு எளிதல்ல. இதற்காகவே ஆராய்ச்சிக் குழு 200 ஆண் கொசுக்களைத் தனிமைப்படுத்தி Mass Spectrometry கருவி மூலமாக கொசுக்களின் விந்தணுக்களின் புரதங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். 

இந்த முறையை இவர்கள் மேற்கொள்வதற்குக் காரணம், இதுதான் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதகமும் ஏற்படுத்தாமல் கொசு உற்பத்தியைத் தடுக்கும் வழிமுறையாகும். இரவு நேரங்களில் நம்மை தூங்க விடாமல் செய்யும் கொசுக்களை பழி வாங்குவதற்கு, நமக்கும் ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்து விட்டது என்று கொள்ளலாமா?.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com