லோன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பினால் மக்கள் மகிழ்ச்சி..!!

repo rate
repo rate
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 5.25% ஆகத் தொடரும் எனவும் அதே சமயம் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி தனது பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% ஆக மாற்றமின்றி வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. ஈரான் போர் காரணமாக உலகளாவிய அரசியல் பதற்றம் , எண்ணெய் விலை உயர்வு அபாயம், ரூபாய் மதிப்பு மீதான அழுத்தம் போன்ற காரணங்களால் உலக பொருளாதாரத்தில் நிலைத்தன்மை இல்லை என்றும் எனினும் இந்தியாவின் பொருளாதார ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு படி வட்டி உயராமலும் குறையாமலும் நிலையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி எனப்படும் பெற்ற கடனுக்கான வட்டி விகிதம் 5.25% என்பதில் மாற்றமில்லை மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. வட்டியில் மாற்றமில்லாததால் கடன் தவணையிலும் மாற்றம் வராது என்றும் சாதாரண மக்களுக்கு நன்மை தரும் விதத்தில் வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் மற்றும் வங்கி கடன் வட்டி விகிதமும் நிலையாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com