கேரளாவைச் சேர்ந்த அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க்கின் வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா. இதன் மூலம் ஏப்ரல் 24, 2023 அன்று இவ்வங்கியின் வர்த்தக நேரம் முடிவடையும் நேரத்தில் இருந்து இது நடைமுறைக்கு வரும்.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் வங்கி வணிகத்தைத் தொடர கேரளாவின் அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க் லிமிடெட்-க்கு ஜனவரி 3, 1987 தேதியிட்டு வழங்கப்பட்டு உள்ள வங்கி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க்-ன் வங்கி உரிமத்தை முழுமையாக ரத்து செய்து முடக்காமல் வங்கி அல்லாத நிறுவனமாக அதாவது NBFC ஆக செயல்பட அனுமதித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இனி அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க் வங்கி உரிமம் அல்லாமல் NBFC உரிமத்துடன் வங்கி சேவைகளை வழங்கலாம். வங்கிக்கும் என்பிஎஃப்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், வங்கி என்பது மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், அதேசமயம் என்பிஎஃப்சி என்பது வங்கி உரிமம் இல்லாமல் மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் என்பதாகும்.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, அடூர் கோ ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க்-ன் உரிம ரத்து ஏப்ரல் 24, 2023 அன்று வங்கி வர்த்தகம் முடிவடையும் நேரம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் படி ஆப்ரேட்டிவ் அர்பன் பேங்க் ஏப்ரல் 25 முதல் section 5(b) கீழ் இருக்கும் எவ்விதமான பேங்கிங் சேவைகளையும் தொடர கூடாது. இதில் உறுப்பினர் அல்லாதவர்களிடம் டெபாசிட் பெறுவதையும் தடை செய்யப்பட்டு , உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.