இந்தியாவில் 5 கூட்டுறவு வங்கிகளுக்கு ஆர்பிஐ கட்டுப்பாடு!

இந்தியாவில் 5 கூட்டுறவு வங்கிகளுக்கு ஆர்பிஐ கட்டுப்பாடு!

இந்திய ரிசர்வ் வங்கி 5 கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் வழங்குபவர்களின் நிதி நிலைமை மோசமடைந்ததை அடுத்துப் பணம் எடுப்பது உட்படப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் ஆறு மாதங்களுக்குத் தொடரும் என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கைகளில் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ வெளியிட்டு உள்ள அறிக்கைகள் படி HCBL கூட்டுறவு வங்கி - லக்னோ (உத்தரப் பிரதேசம்), ஆதர்ஷ் மஹிலா நகரி சககாரி வங்கி மரியடிட் - அவுரங்காபாத் (மகாராஷ்டிரா), ஷிம்ஷா சககாரா வங்கி நியாமிதா - மத்தூர், கர்நாடகாவில் மண்டியா மாவட்டம் ஆகிய மூன்று வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கடன் வழங்குபவர்களின் தற்போதைய பணப்புழக்க நிலை காரணமாக அவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகள் மூலம் இந்த 5 வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட அளவிலான தொகையை மட்டுமே தங்களுடைய கணக்கில் இருந்து எடுக்க முடியும். உரவகொண்டா கூட்டுறவு நகர வங்கி - உறவகொண்டா (அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்) மற்றும் ஷங்கர்ராவ் மொஹிதே பாட்டீல் சககாரி வங்கி - அக்லுஜ் (மகாராஷ்டிரா) ஆகிய இரு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் 5,000 ரூபாய் வரை மட்டுமே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்

இதேபோல் வங்கிகளுக்குக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், இந்த 5 வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி, கடன்களை வழங்கவோ, முதலீடு செய்யவோ, எந்தப் பொறுப்பையும் ஏற்கவோ, அதன் சொத்துக்களை மாற்றவோ அல்லது அப்புறப்படுத்தவோ முடியாது.

இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளின் நிதி நிலை மற்றும் கணக்குகளைத் தொடர்ந்து ஆய்வு செய்வது மூலம் முறைகேடுகளைத் தடுப்பது மட்டும் அல்லாமல் ஆர்பிஐ விதிமுறைகளை வங்கிகள் பின்பற்றுகிறதா? என்பதை உறுதி செய்து இந்திய வங்கி அமைப்பை மேம்படுத்த முடியும் என்கிறது ஆர்பிஐ.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com