2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் ஆர்பிஐ!

2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் ஆர்பிஐ!
Published on

கடந்த 7 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

செப்டம்பர் 30ம் தேதி வரை பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிக் கிளைகளிலும், ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்ட போது 2000 ரூபாய் நோட்டுக்கள் புதியதாக அறிமுகப் படுத்தப் பட்டன. கடந்த 7 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரூபாய் நோட்டு கொள்கையின் படி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது. புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி வரும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிக் கிளைகளில் ஒரு நேரத்தில் ரூ.20,000 வரை 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும், தங்கள் கணக்குகளில் டெபாசிட் செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com