ரெடியாகும் தேர்தல் வியூகம்

ரெடியாகும் தேர்தல் வியூகம்

மல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதில் இருந்தே அவருடன் பயணித்தவர் அருணாச்சலம். அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்தவர். அப்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பேசினார். வேளாண் சட்டங்களை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலை கூட்டத்தில் தெரிவித்ததாகவும், விவசாயிகள் நலனை கருத்தில் கொள்ளாமல் கட்சியின் அடிப்படையில் முடிவு எடுப்பதாகவும் குற்றம்சாட்டினார். இப்படி இருந்தால் எப்படி கட்சி மையமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர்   கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கமல் ஹாசனை சந்தித்து பேசினார். அதன் பிறகு மக்கள் நீதி மய்யத்தில் அருணாசலம் மீண்டும் இணைந்துள்ளார்.

கோவை டவுன்ஹால் அருகே உள்ள தனியார் ஹாலில் தனது தாய் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு வருட வன வாசத்திற்கு பின்னர் தாய்க்கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளேன் என்றார். இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் தங்கவேலு, மாநில செயலாளர்கள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம், அனுஷா ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணாசலம்.

என்னை தாய் உள்ளத்தோடு கமல்ஹாசன் அரவணைத்து ஏற்றுக் கொண்டார். உடனடியாக களத்திற்கு சென்று தொண்டர்களின் கருத்துகளை கேட்டு அதை தன்னிடம் வந்து கூறுமாறு கமல்ஹாசன் அறிவுறுத்தினார். அதனை ஏற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி கூறும் விதமாக முதல்கட்ட பயணமாக கோவை வந்துள்ளேன். தொண்டர்கள் அனைவரும் தாய் உள்ளத்தோடு வரவேற்பு கொடுத்தனர். கடைக்கோடி தொண்டர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

அனைத்து மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்களுக்கு என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன். அதுமட்டுமின்றி வரும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பல தொகுதிகளில் மட்டுமின்றி அமோக வெற்றி பெறும்.

கமல் ஹாசனின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்வோம். இதுதொடர்பாக கட்சியினரின் ஆலோசனைகளை பெற்று செல்லவும் வந்துள்ளேன். இது மிகச்சிறந்த பயணமாகவும், நல்லதொரு தொடக்கமாகவும் இருக்கும் என நம்புவதாக அருணாசலம் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com