அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார்! 3வது முறையாக களத்தில் குதிக்கும் டிரம்ப்!

அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார்! 3வது முறையாக களத்தில் குதிக்கும் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப் 2024இல் நடைபெறவிருக்கும் அதிபர் போட்டியில் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு, நவம்பர் மாதம் அதிபர் தேர்தலுக்கான போட்டி நடைபெற்றது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றார். அத்தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் 2வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் தோல்வியை சந்தித்தார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரு நபர் இரண்டு முறைதான் அதிபராக முடியும். பெரும்பாலும் முதலில் அதிபராக பதவியேற்பவர் அடுத்தமுறையும் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்று தொடர்ந்து 2வது முறையாக அதிபராக இருப்பார். அப்படி தொடர்ந்து வெற்றியை பெற முடியாமல் போனவர்கள் 3 பேர் மட்டுமே. அதில் ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் டபிள்யூ புஷ்-ஐத் தொடர்ந்து டிரம்ப்-ம் இணைந்த நிலையில், அடுத்து 3வதாக அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

2020 ல் நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக டிரம்ப் குற்றம் சாட்டியதோடு, அதுகுறித்து வழக்கு தொடுத்தும் அவை தள்ளுபடி செய்யட்டன. இந்நிலையில் டிரெம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் பல இடங்களிலும் போராடத் துவங்கினர். போராட்டம் கலவரமாகவும் மாறியது.

இந்நிலையில், சமீபத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், 'விரைவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன்' என்று கூறியதையடுத்து, நேற்று, 'அமெரிக்காவை மேலும் சிறப்புடையதாக்கவும், புகழ்பெற்றதாகவும் மாற்றுவதற்காக, வருகின்ற 2024ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கிறேன்' என்று அறிவித்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களையும் வழங்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com