தமிழ்நாட்டில் பதிவுக் கட்டணம் உயர்வால் ரியல் எஸ்டேட் துறைக்கு பின்னடைவு

தமிழ்நாட்டில் பதிவுக் கட்டணம் உயர்வால் ரியல் எஸ்டேட் துறைக்கு பின்னடைவு

சென்ற வாரம் பத்திரப் பதிவு கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்தி தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டது, ரியல் எஸ்டேட் துறை சார்ந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே பொருளாதார பின்னடைவு, கட்டுமான பொருட்களை விலை உயர்வின் காரணமாக மந்த நிலையில் உள்ள ரியல் எஸ்டேட் துறைக்கு இது பலத்த அடியை தந்திருக்கிறது என்கிறார்கள்.

கொரானா தொற்றுக்கு பின்னர் பதிவுக்கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. ஆனால், இரண்டாவது அலைக்கு முன்னதாகவே பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனாலும் ரியல் எஸ்டேட் துறை மந்தமாகவே செயல்பட்டு வந்தது, கட்டுமானத்துறை மூலப் பொருட்களான சிமெண்ட், மண் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது ரியல் எஸ்டே விற்பனையாளர்களை கடுமையாக பாதித்திருக்கிறது.

50 லட்சம் பெறுமானமுள்ள பிளாட்டை வாங்கும் சமானிய குடிமகன், இனி குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாயை பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இது தவிர முத்திரைத்தாள் கட்டணம், பதிவுத்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களால் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாயை தனியாக ஒதுக்க வேண்டியிருக்கும்.

கட்டுமான ஒப்பந்தத்தை பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் என்கிற நடைமுறை சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது மூன்று சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் பதிவுக்கட்டணம் தொடர்பான செலவுகளின் காரணமாக பிளாட் விலை குறைந்தபட்சம் சதர அடி 100 ரூபாயை உயரும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு கட்டிட தொழிலாளர்கள் சங்கம் உள்பட ஏராளமான அமைப்புகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. தமிழக அரசு, என்ன செய்யப்போகிறது?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com