விவசாயிகளின் பொருள்களுக்கு உரிய விலை:அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை!

விவசாயிகளின் பொருள்களுக்கு உரிய விலை:அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை!

விளைபொருள்களுக்கான உரிய விலையை உழவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று 4 மாவட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்தார்.

கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் ஒரு பகுதியாக நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியது, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் மாவட்டங்களினுடைய வளர்ச்சி பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டத்தை உள்ளடக்கிய நான்கு மாவட்ட அதிகாரிகளிடம் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த மாவட்டங்கள் வேளாண்மையில் முக்கியத்துவம் கொண்ட மாவட்டங்களாகவும். தமிழ்நாட்டினுடைய நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சையும் இந்த பகுதியில் தான் அமைந்திருக்கிறது. இதனால் இந்த பகுதியினுடைய வேளாண் வளர் என்பது இன்றியமையாதது. வேளாண் துறையோடு சேர்ந்து தொழில், வர்த்தகம், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும்.

கள ஆய்வின் முதல்வன் திட்டம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தற்போது திட்டம் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. முதல் கூட்டத்தில் இப்படியான கேள்விகள் கேட்கப்பட்டது என்று தெரிந்து கொண்ட அதிகாரிகள் இரண்டாவது கூட்டத்தில் அவற்றை சரி செய்ய முயற்சி எடுத்து இருப்பதை இரண்டாவது கூட்டத்தை பார்த்தபோது அறிய முடிந்தது.

100 நாள் வேலை திட்டத்தின் வேலை நாட்களை உயர்த்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். கிராம பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அரசியல் திட்டங்கள் அனைத்தும் விரைவாகவும் எளிதாகவும் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தற்போது டெல்டா மாவட்டத்தில் வேளாண்மையினுடைய பரப்பு குறைந்து வருகிறது. கவலை அளிக்கிறது. வேளாண் பரப்பை அதிகரிக்க, சலுகைகள் மானியங்கள், புதிய திட்டங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இந்த மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகம் காணப்படுகின்றன ஆனால் தற்போது தென்னை பரப்பு குறைந்து வருகிறது. தென்னை மரத்தை அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தியை அதிகரிப்பதோடு நின்று விடாமல் விளை பொருள்களுக்கு உரிய விலையை உழவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டத்தினுடைய வேளாண்மைக்கு ஏற்ப புதிய திட்டங்களை மாவட்ட ஆட்சியர்கள் வகுத்து அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அதோடு தொழில்துறை சார்ந்த முன்னேற்றத்தையும் மேற்கொள்ள வேண்டும். பட்டா, சான்றிதழ் கோரிய விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் மீனவர்கள் நலன் குறித்தும் முதலமைச்சர் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com