மைக்ரோசாப்ட்டின் முக்கிய மூன்று பிரிவுகளில் பணிநீக்கம்!

மைக்ரோசாப்ட்டின் முக்கிய மூன்று பிரிவுகளில் பணிநீக்கம்!
Published on

மைக்ரோசாப்ட் கடந்த மாதம் உலகளவில் சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யத் துவங்கியது மைக்ரோசாப்ட் நிர்வாகம்.

தற்போது மைக்ரோசாப்ட் சில முக்கியமான பிரிவுகளை டார்கெட் செய்து பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ரெட்மாண்ட்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஹோலோலென்ஸ், சர்ஃபேஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் பிரிவுகளின் வன்பொருள் பிரிவுகளை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவதாக ப்ளூம்பெர்க்கின் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் அமெரிக்க அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து 6900 ஹலோலென்ஸ் combat goggles வாங்கும் 400 மில்லியன் டாலர் திட்டத்தை ரத்து செய்த நிலையில், தற்போது பணிநீக்கத்தில் அதிகளவிலான பணிநீக்கம் ஹலோலென்ஸ் பிரிவில் உள்ளதாகத் தெரிகிறது. இதேபோல் 400 மில்லியன் டாலர் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தான் பணிநீக்கம் செய்யப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் ஹலோலென்ஸ் , சர்பேஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் சியாட்டில் நகரத்தில் மட்டும் சுமார் 617 ஊழியர்கள் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த சில ஊழியர்கள் பணிநீக்கக் கடிதங்களைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

ஹலோலென்ஸ் பிரிவின் முன்னாள் ஊழியரான Kristian Davila லின்கிடுஇன் தளத்தில் தன்னுடன் பணியாற்றிய பலர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதே போல் டிசைன் பிரிவில் பணியாற்றிய Sophie Stellmach-ம் இந்தப் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் மைக்ரோசாப்ட்-ன் கேமிங் எக்ஸ்பாக்ஸ் பிரிவின் தலைவர் பில் ஸ்பென்சர் தனது அணியில் இருக்கும் பலருக்கு பணி நீக்க கடிதத்தை அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளைக் குறைக்கும் விதமாக மைக்ரோசாப்ட் அதிக லாபம் வருவாய் வாடிக்கையாளர்களை அளிக்காத பிரிவுகளைக் குறித்துப் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com