திருநங்கைகளுக்கு கட்டுப்பாடு - நியாயமா?

திருநங்கைகளுக்கு கட்டுப்பாடு - நியாயமா?

ர்வதேச விளையாட்டு போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே திருநங்கைகள் கலந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது ஒரு புறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இதுவரை அவர்கள் மகளிர் பிரிவிலேயே விளையாடி வந்தனர். அவர்களுக்கென்று எவ்விதமான தனி பிரிவிலும் விளையாட்டு நடத்தப்படவில்லை. 

இந்நிலையில் உலகத் தடகள அமைப்பானது இனி திருநங்கைகள் மகளிர் பிரிவில் விளையாடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் திருநங்கைகளில் ஆண் பாலின ஹார்மோன் அதிகம் உள்ளவர்கள் போட்டிகளில் பங்கேற்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து பேசிய உலகத்தடங்கள் அமைப்பின் தலைவர், ஆணாகப் பிறந்து பின்னர் பெண்ணாக மாறியவர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் பிரிவில் பங்கேற்பதால், மகளிர் போட்டிகளில் சரிசமமான பங்கேற்புகள் இருப்பதில்லை என தெரிவித்தார். இந்த உத்தரவின் படி, ஆண் பாலின ஹார்மோனான 'டெஸ்டோஸ்டீரான்' அளவு அதிகம் இருக்கும் திருநங்கைகள், மருந்து மூலம் அதை குறைக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்ட அளவிலேயே அந்த ஹார்மோன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Budapest-ல் உலக சாம்பியன் தடகளப் போட்டிகளும், அடுத்த ஆண்டு பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகளும் நடக்க உள்ள நிலையில், எனவே இந்த புதிய உத்தரவால் வீராங்கனைகள் இவற்றில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

விளையாட்டு என்பது வெறும் ஆண் பெண்களுக்காக மட்டுமே கிடையாது. ஆண் பெண் மட்டுமே அதை உரிமை கொண்டாட முடியாது. இந்த பூமியானது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. எனவே இதுபோன்ற ஒருதலைபட்சமான முடிவை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது என உலக தடகள அமைப்பின் கருத்துகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

குறிப்பாக ஏற்கனவே தடகளப் போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருக்கும் சில திருநங்கைகள் இதனால் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இந்த பிரச்சனையை தீர்க்க உலக தடகள அமைப்பு திருநங்கைகள் சார்பில் ஒரு குழு அமைக்கும் எனக் கூறியுள்ளார்கள். 

கடந்த ஆண்டு கூட உலகத் தண்ணீர் போட்டிகளில் விளையாட, திருநங்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் அவர்களால் விளையாட முடியாத நிலையில், தற்போது தடகள போட்டிகளிலும் அவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதித்திருப்பது திருநங்கை வீராங்கனைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே பல இடங்களிலும் திருநங்கைகள் ஒதுக்கப்படும் நிலையில், இந்த முடிவுக்கு திருநங்கைகள் தரப்பில் பல்வேறு விதமான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

அவர்கள் எங்கே கால்பதித்து முன்னேற நினைத்தாலும், அங்கே முட்டுக்கட்டை போட்டு தடுப்பது நியாயமா? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com