மாணவர்கள் ஷாக்..! நாளை மறுநாள் வெளியாக இருந்த +2 முடிவுகள் தள்ளிவைப்பு..!

SCHOOL EXAM
SCHOOL EXAM
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நாளை மறுநாள் வெளியிடப்பட இருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு அடித்தளமாக விளங்கும் பிளஸ் டூ தேர்வுகளின் முடிவுகள் வெளியாவதில் தற்போது சிக்கல் உண்டாகியுள்ளது. கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் எழுதியுள்ளனர். தேர்வு முடிந்த கையுடன் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியும் ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. தேர்வுத்துறை மே 8ஆம் தேதி அன்று முடிவுகளை வெளியிடலாம் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது நிலவும் அரசியல் சூழல் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் காரணமாக திட்டமிட்ட தேதியில் முடிவுகளை அறிவிப்பதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

வரும் 8ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த +2 தேர்வு முடிவுகள் தள்ளிப் போகக்கூடிய சூழல் நேர்ந்திருக்கிறது. மே 4ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், புதிய அரசு பொறுப்பேற்கும் சூழல் நிலவுவதால், தேர்வு முடிவுகளை முறைப்படி வெளியிடுவதற்கு புதிய நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டி உள்ளது.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், அரசின் முறையான அனுமதி கிடைத்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதனால் மே 8ஆம் தேதி முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை என்பதும், புதிய அரசு அமைந்தவுடன் இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டு விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என்பதும் உறுதியாகியுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் மதிப்பெண் பதிவேற்றம் முடிவடைந்தாலும், அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகே அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மே 8ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், புதிய அரசு அமைந்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்பாக அறிவிப்பு வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல் வெளியிட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com