வளர்ச்சி பாதையினை நோக்கி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்!

Jio
Jio

இந்தியாவின் முன்னணி வணிக குழுமமான ரிலையன்ஸ், அதன் தொலைத் தொடர்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் காலாண்டு முடிவினை தற்போது வெளியிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து தனது 5ஜி சேவையினை பல்வேறு நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து வருகின்றது. அதன் வயர்லெஸ் சேவையினையும் விரிவாக்கம் செய்து வருகின்றது. இதற்கிடையில் அதன் வளர்ச்சி விகிதம் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 5ஜி சேவையினை 16 நகரங்களில் வெளியிடவுள்ளதாக இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது. இது ஆந்திரபிரதேசத்தில் காக்கிநாடா, கர்னூலிலும், அசாமில் சில்சாரிலும், கர்நாடகா மாநிலத்தில் தாவணகெரே, ஷிவமொக்கா, பிடார், ஹோஸ்பேட், கடக் பேட்டகேரி, மலப்புரம், பாலக்காடு, கோட்டயம் உள்ளிட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Mukesh ambani
Mukesh ambani

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கண்ணூர் (கேரளா), திருப்பூர் (தமிழ் நாடு), நிஜாமாபாத், கம்மம் (தெலுங்கானா), பரேலி (உத்திரபிரதேசம்) உள்ளிட்ட நகரங்களில், பெரும்பாலானவற்றில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய முதல் தொலைத் தொடர்பு நிறுவனமாகும். ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளார்ட்பார்ம்ஸ் லிமிடெட், உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்காக நெட்வொர்க்கினை விரிவாக்கம் செய்து வருகின்றது.

ரிலையன்ஸ் குழுமத்தின் டிஜிட்டல் சேவை வழங்குனரான ஜியோ நிறுவனம், இதன் நெட்வொர்த் டிசம்பர் காலாண்டில் 2,11,281 கோடி ரூபாயாகும். இது செப்டம்பர் காலாண்டில் 2,06,644 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டில் 1,93,616 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த சொத்து விகிதத்தில் கடன் விகிதம் 0.08% ஆகும்.

முகேஷ் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் இரு இலக்க வளர்ச்சியினை கண்டுள்ளது. இதன் மூன்றாவது காலாண்டு நிகரலாபம், 28.3% அதிகரித்து, 4638 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3615 கோடி ரூபாயாக இருந்தது. இதே செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 4518 கோடி ரூபாய் லாபத்தினை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது 22,998 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 19,347 கோடி ரூபாயாக இருந்தது. இது வரலாறு காணாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள நிலையில் 18.87% அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தி வருவாய் விகிதமானது 22,521 கோடி ரூபாயாக இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com