வடகிழக்கு பருவமழையால்  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50 கோடி ரூபாய் நிவாரணம்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50 கோடி ரூபாய் நிவாரணம்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு 50 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் 8 ஆயிரத்து 562 விவசாயிகளுக்கு 6 கோடியே 96 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு 48,593 விவசாயிகளுக்கு ரூ.50,88,84,224-ஐ இடுபொருள் நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக கடந்த மாதம் 14ம் தேதி மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நிலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகள் 3.11.2022 மற்றும் 11.11.2022 ஆகிய தினங்களில் பெய்த மிக பலத்த மழையினால் பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர்சேத விவரங்களின் அடிப்படையில், மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் 32,533.4630 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.43,92,01,750.50 வழங்கிடவும், மேலும், கடலூர், திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் 5,222.192 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் 8562 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.6,96,82,473.50 வழங்கிடவும், தமிழக முதல்வரால் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 48 ஆயிரத்து 593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக 50 கோடியே 88 லட்சம் ரூபாய் இடுபொருள் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிக பாதிப்புக்குள்ளான மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு 43 கோடியே 92 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com