அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

தில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீடு புதுப்பிப்பு: 7 அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிப்பதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறி இது தொடர்பாக விளக்கம் கேட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 7 பேருக்கு ஊழல் கண்காணிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலைமைச் செயலாளரின் அறிக்கை பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் 15 நாட்களுக்குள் பதிலளிக்கும்படியும் ஊழல் கண்காணிப்பு இயக்ககம் கூறியுள்ளது. தலைமை பொறியாளர் மற்றும் 6 அதிகாரிகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வரின் தேவையை கருதி வீட்டை புதுப்பிக்கும் பணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் விதிமீறல் நடந்துள்ளது. மேலும் புதுப்பித்தலுக்கான தொகையும் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் உள்ளது. எந்தவித ஆய்வு அறிக்கையும் இல்லாமல் பழைய கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கு முன் அனுமதி பெறப்படவில்லை என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழல் கண்காணிப்புத்துறையின் சிறப்பு செயலாளர் ராஜசேகர் இதற்கான நோட்டீஸை பிறப்பித்துள்ளார். தில்லியில் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த

நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, ராஜசேகர் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர ச்ச்தேவா, விசாரணை நடந்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று குறிப்பிட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணையை சந்திக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.

முன்னதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியிருந்தது.

இது தொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பாத்ரா கூறுகையில், கெஜ்ரிவால் அரசியலுக்கு வந்தபோது நேர்மையாகவும் எளிமையாகவும் இருப்பேன் என்றார். ஆனால், இப்போது ஆடம்பர வாழ்க்கைக்கு அவர் மாறிவிட்டார். தனது வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி மக்கள் வரிப்பணத்தை செலவிட்டுள்ளார். விலை உயர்ந்த பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன, மரக்கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. திரைச்சீலைகள் போடப்பட்டுள்ளன என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா, 1942 இல் கட்டப்பட்ட இந்த வீடு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மேற்கூறை மூன்று முறை பெயர்ந்து விழுந்தது. துணை நிலை ஆளுநர் வீட்டை புதுப்பிக்க இதைவிட அதிக தொகை

செலவிடப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களின் வீடுகளும் பெரும் தொகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com