"இங்கு காதலி வாடகைக்குக் கிடைக்கும்"! மன அழுத்தத்தைப் போக்க ஜப்பான் அரசின் புதிய திட்டம்! 

"இங்கு காதலி வாடகைக்குக் கிடைக்கும்"! மன அழுத்தத்தைப் போக்க ஜப்பான் அரசின் புதிய திட்டம்! 
Published on

னிமையில் வாடும் இளைஞர்களைக் குறி வைத்து காதலியை வாடகைக்கு விடும் பிஸினஸை டோக்கியோவைச் சேர்ந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி பாய் பிரண்ட் கூட வாடகைக்கு எடுக்கலாமாம். கேட்பதற்கே மோசமாக இருக்கும் இந்த பிஸினஸை ஜப்பான் அரசாங்கமே அனுமதித்ததன் பின்னணி பற்றி பார்க்கலாம். 

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானில் தனியாக வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, வேலை சூழ்நிலை காரணமாக பிள்ளைகள் நகரங்களை நோக்கிச் செல்வதால் ஏராளமான பெற்றோர் தனிமையில் தங்கள் நாட்களை கழிக்கிறார்கள். அதேபோல் பலர் வயதான பெற்றோர் தனிமையில் இருப்பதால் அவர்கள் இறந்து பல நாட்கள் ஆன பின்னர்தான் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவருகிறது. 

அதேபோல் கடுமையான பணிச்சூழல் காரணமாக பொது இடங்களில் தூங்கும் ஜப்பானியர்களை மிக சாதரணமாக அங்கு பார்க்க முடியும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதை பெரிய குறிக்கோளாக வைத்துக்கொண்டு சமீப ஆண்டுகளாக ஜப்பானில் தனித்துவரும் முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், திருமணம் செய்து கொள்ளாதவர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ஜப்பான் அரசு, வாடகைக்கு காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 

தனிமை நினைத்தால் ஒரு மனிதனை கோபுரத்தின் உச்சிக்கும் கொண்டு செல்லும், அல்லது அதல பாதாளத்திலும் தள்ளிவிடும். அது அந்தத் தனிமையை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது. சிலர் தனிமையை அவர்களின் சுய முன்னேற்றத்திற்காக விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். சிலருக்கு தனிமையானது பிறரால் பரிசளிக்கப்படுகிறது. இத்தகைய தனிமையை மற்றவர்களால் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது கடினமாக இருக்கிறது. அது பல மன அழுத்தமான சூழ்நிலைகளுக்குள் அவர்களை கொண்டு செல்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக காதல் தோல்வியைக் கூறலாம். காதலில் தோல்வியுற்றவர்கள், திருமண பந்தத்தில் நாட்டமில்லாதவர்கள் பெரும்பாலான சமயங்களில் சிங்கிளாகவே இருப்பதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். 

இத்தகைய பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் நபர்களுக்கு தீர்வை கொடுக்கும் விதமாகத்தான், தனிமையை உணர்பவர்கள் ஒரு மணி நேர வாடகைக்கு காதலன்/காதலியை  எடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது. "இந்தத் திட்டம் கேள்விப்படவே மோசமாக இருக்கிறது, இதற்கு ஏன் அந்த அரசு தடை விதிக்கவில்லை" என நீங்கள் கேட்கலாம். ஜப்பானில் பெரும்பாலான மக்கள் சிங்கிளாக இருப்பதால், மனச்சோர்வுக்குள்ளாகி தவறான முடிவுகளை எடுக்க நேரிடுகிறதாம். எனவே இத்தகைய திட்டத்தை அறிவுறுத்தியதே அரசின் குழு தானாம். 

ஆனால் இந்தத் திட்டம் நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு மலிவானதில்லை. ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் மூன்றாயிரம் என்ற விகிதத்தில், குறைந்தது ஒரு காதலியை இரண்டு மணி நேரத்திற்கு வாடகை எடுக்க வேண்டும். மேலும் உங்களுக்கான கேர்ள் பிரண்டை தேர்வு செய்ய கூடுதலாக 1200 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. வாடகைக்கு இருக்கும் காதலிகள் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளக்கூடாது. அதற்காகவே இருக்கும் செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டும். வாடகைக்கு எடுக்கும் நபர்களிடமிருந்து எவ்விதமான பரிசுப் பொருட்களையும் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. 

இந்தத் திட்டம் நமது ஊரில் வந்திருந்தால் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இத்திட்டத்தைப் பற்றி ஜப்பானியர்கள் நேர்மறையாகக் கருத்து கூறிவரும் நிலையில், இதைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் வஞ்சித்தும் புகழ்ந்தும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com