குடியரசு தின உரையாற்றுகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !

குடியரசு தின உரையாற்றுகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !
Published on

குடியரசு தினத்தையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார். குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவி ஏற்ற பிறகு குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை. நம் தாய் திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டியே நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று உரை ஆற்றுகிறார்.

தூர்தர்ஷன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்பும். அகில இந்திய வானொலியிலும் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை ஒலிபரப்பாகிறது.

இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை விடுத்த அறிக்கையில், “நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 25ம் தேதி இரவு 7 மணிக்கு உரை ஆற்றுகிறார். இதை அகில இந்திய வானொலி தனது அனைத்து அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புகிறது. இதே போன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்தியிலான இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தூர்தர்ஷன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்பும். அகில இந்திய வானொலியிலும் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை ஒலிபரப்பாகிறது.

நம் தாய் திருநாட்டின் 74-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. முப்படைகளின் அணிவகுப்புடன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

இதையொட்டி தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. சந்தைகள், மக்கள் கூடும் இடங்கள், பிற முக்கிய இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு படையினர், மோப்ப நாய் படையினைக் கொண்டு பயங்கரவாத தடுப்பு சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 6,000  போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com