தெலங்கானா முதல்வராகிறார் ரேவந்த் ரெட்டி!

Revanth Reddy
Revanth Reddy

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றதை அடுத்து, அங்கு ரேவந்த் ரெட்டி முதல்வராக இருப்பார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. தெலங்காவின் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால், தெலங்கானா மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ரேவந்த் ரெட்டியை முதல்வராக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை (டிசம்பர் 7) பதவியேற்கிறார் என்றார்.

தெலங்கான மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முழுவெற்றிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டிதான் முக்கிய காரணம். 56 வயதான ரேவந்த் ரெட்டி 6 ஆண்டுகளுக்கு முன்னர்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் குறுகியகாலத்தில் படிப்படியாக உயர்ந்து கட்சியின் மாநிலத் தலைவரானார். ரெட்டியின் செயல்பாட்டுக்கு வரவேற்பும் இருந்தது. விமர்சனங்களும் எழுந்தன. தமது கட்சிகாரர்களையே அவர் கடுமையாக விமர்சித்ததும் உண்டு.

இதையும் படியுங்கள்:
தெலங்கானா தோல்விக்கு கே.சி.ஆரே. காரணம்!
Revanth Reddy

அவருக்கு இருக்கும் கூடுதல் தகுதி என்னவென்றால், அவர் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடுவை அரசியல் குருவாக ஏற்று செய்யப்பட்டு வந்தவர். முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வாக இரண்டு முறை பதவி வகித்தவர்.

1969 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, மஹபூப்நகர் மாவட்டம், கொண்டாரெட்டி பள்ளி என்னுமிடத்தில் பிறந்த ரேவந்த் ரெட்டி, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வென்றவர். கல்லூரி நாட்களில் அவர், வலதுசாரி அமைப்பான ஏ.பி.வி.பி. (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்) உடன் தொடர்பில் இருந்தவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com