நூதனமான பழிவாங்கல்! மனைவிக்கான 2 லட்சரூபாய் ஜீவனாம்சத்தை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கிய கணவர்!

நூதனமான பழிவாங்கல்! மனைவிக்கான 2 லட்சரூபாய் ஜீவனாம்சத்தை 10 ரூபாய் நாணயங்களாக வழங்கிய கணவர்!

சேலம் மாவட்டம், சங்ககிரி நீதிமன்றத்துக்கு 11 மூட்டைகளில் 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் ராஜி என்ற நபர்.

தேவன்ன கவுண்டனூர் ஊராட்சி, கிடையூர் பகுதியைச் சேர்ந்த ராஜி தனியார் நிறுவனமொன்றில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கும் அவரது மனைவி சாந்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கணவரிடமிருந்து மாதம் ரூ 5000 ஜீவனாம்சம் கோரி சங்ககிரி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்திருந்தார். அதையொட்டி நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் சாந்திக்கு மாதந்தோறும் ரூ.3000 ஜீவனாம்சமாக வழங்க 2014 ஆம் ஆண்டே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கோர்ட் உத்தரவின் படி மனைவில்லு மாதம் தோறும் ரூ.3000 ஜீவனாம்சம் வழங்கத் தொடங்கினார் ராஜி.

ஆனால், வழக்குத் தொடர்ந்த தேதியில் இருந்து தீர்ப்பு வெளியான காலகட்டத்துக்கும் சேர்த்து ஜீவனாம்சத் தொகையைக் கணக்கிட்டு மொத்தமாகத் தனக்கு கிடைக்கும் படி செய்யவேண்டுமெனக் கோரி சாந்தி மீண்டும் நீதிமன்றப் படியேறினார். அதற்காக மீண்டும் தனியாக வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கிலும் சாந்திக்கு ஆதரவாகவே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாந்திக்கு ஜீவனாம்சத் தொகையாக ரூ2 லட்சத்து 18 ஆயிரம் வழங்க நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவால் நொந்து போன ராஜி, தன் முன்னாள் மனைவியைப் பழிவாங்க நூதனமான முறை ஒன்றைக் கண்டறிந்தார். அதன்படி 2,18,000 ரூபாய் பணத்தை மொத்தமும் 10 ரூபாய் நாணயங்களாக மாற்றி அதை 11 மூட்டைகளில் எடுத்து வந்து சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வியாபாரிகள் புழக்கத்திற்கு ஒப்புக்கொள்ளாத 10 ரூபாய் நாணயங்களை 11 மூட்டைகளில் வைத்துக் கொண்டு என்ன செய்வது? எனும் கேள்வியில் சாந்தி திகைத்துப் போயுள்ளார் எனத் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com