அரிசி அரசியல் ஆரம்பம்: கைவிரித்த கர்நாடக அரசு,போராட தயாராகும் பா.ஜ.க!

அரிசி அரசியல் ஆரம்பம்: கைவிரித்த கர்நாடக அரசு,போராட தயாராகும் பா.ஜ.க!
Published on

ஆட்சிக்கு வந்ததும் வறுமைக்கோட்டில் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்த கர்நாடக காங்கிரஸ் கட்சி, அரிசி கிடைக்காமல் தடுமாறுவதாக செய்திகள் வெளியாகின்றன. மத்திய அரசு தேவையான அரிசியை வழங்காத காரணத்தால் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதமாவதாக முதல்வர் சித்தாராமையாவும் விளக்கமளித்திருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபாரமான வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. இலவச அரிசி உள்ளிட்ட முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள்தான் வெற்றிக்கு காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்க தயாராக இருக்கிறோம். ஆனால், போதுமான அரிசி இருப்பில் இல்லை என்று ஆளுங்கட்சி தெரிவித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் இலவச அரிசியை வழங்குவதற்காக இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைத்தோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அடுத்த நாளே தங்களால் அரிசி வழங்க இயலாது என்று கூறி மறுத்துவிட்டார்கள். முதலில் அரிசி இருப்பதாக கூறிவிட்டு பிறகு இல்லையென்று மறுப்பதை எப்படி புரிந்து கொள்வது? அரிசி தரமுடியாது என்று முன்னரே கூறியிருந்தால் மத்திய அமைச்சரிடம் பேசியிருப்பேன். ஏழைகளுக்கான திட்டத்தில் ஏன் குறுக்கீடு செய்கிறார்கள்?

கர்நாடகத்தில் அரிசி கொள்முதல் செய்ய வேண்டுமென்றால் விலை அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் ராய்ச்சூரில் ஒரு கிலோ அரிசி ரூ.55 ஆகிறது. மத்திய அரசு கிலோ அரிசி ரூ.36-க்கு வழங்குகிறது. மத்திய அரசு தந்தால் மட்டுமே மாநில அரசால் சமாளிக்க முடியும். கர்நாடகத்தில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் மத்திய அரசிடம் பேசி, அரிசிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அன்ன பாக்ய திட்டம் என்னும் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கைவிரித்ததோடு, கர்நாடக பா.ஜ.க தலைவர்கள்தான் உதவி செய்யவேண்டும என்று சொல்லியிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியருக்கறிது. மத்திய அரசு அரிசி வழங்க மறுத்துவிட்டதாக முதல்வர் பொய் பிரச்சாரம் செய்கிறார்.

காங்கிரஸ் அரசு, மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். வரும் ஒன்றாம் தேதி ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசியை வழங்காவிட்டால் பா.ஜ.க கட்சி போராட்டத்தில் குதிக்கும் என்று பா.ஜ.கவினர் அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடந்தது, இனி கர்நாடகாவிலும் நடக்கப்போகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com