லண்டனில் லேபர் கட்சி அமோக வெற்றி… தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக்!

Labour party Head
Labour party Head
Published on

பிரிட்டனில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதனையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சி மிக குறைந்த இடங்களிலேயே வெற்றிபெற்றுள்ளது.

பிரிட்டனில் என்றும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும்தான் போட்டியே. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த காலக்கட்டங்களில் பிரிட்டன் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்தது. போராட்டங்களும் வெடித்தன.

நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதற்கிடையே பிரிட்டன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டார். அங்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வரும் போதிலும் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் சூழலே ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ள நிலையில், ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி சுமார் 60 இடங்களில் மட்டுமே வென்றுள்ளன.

இதனால் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் தொழிலாளர் கட்சியே ஆட்சியைப் பிடிக்கிறது. அதேபோல், வரலாறு காணாத அளவு ரிஷி சுனக் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தோல்விக்கு ரிஷி சுனக்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தப் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.. இதற்காக அக்கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மரை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். அதிகாரம் அமைதியாகவும் சட்டப்பூர்வமான முறையிலும் கைமாறும். நமது நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலத்தில் நாம் அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்... இந்த தோல்விக்கு கன்சர்வேடிவ் கட்சியினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்". என்றார்.

ஒருகாலத்தில் பொருளாதாரத்தில் மேலோங்கி இருந்த லண்டன், தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  பிரிட்டன் நாட்டில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வரி சுமை இந்தளவுக்கு அதிகமாக இருந்ததே இல்லை. அதேபோல நிகரக் கடன் கிட்டத்தட்ட வருடாந்திர பொருளாதார உற்பத்திக்குச் சமமாக உள்ளது.. பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது.. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிகிச்சை பெறும் தேசிய மருத்துவ சேவைகளில் சிகிச்சை பெறப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

இந்த சூழ்நிலையிலிருந்து பிரிட்டனை மீட்டெடுக்குமா வெற்றிபெற்ற லேபர் கட்சி?

இதையும் படியுங்கள்:
வெறித்தனமாக வேலை செய்யும் நபர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் தீர்வுகளும்!
Labour party Head

லேபர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர். இவர் ஒரு முன்னாள் மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆவார். அவர் 2015ம் ஆண்டு முதல் MPயாகவும் பணியாற்றி வருகிறார். 61 வயதான ஸ்டார்மர் பிரிட்டிஷ் பிரதமராக பதவியேற்கவுள்ள மிக வயதான நபராக இருப்பார். மேலும் அவர் MP ஆக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமராக பதவியேற்கவுள்ளார். அவர் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் நைட் பட்டம் பெற்றவர்.

இந்த ஆட்சி மாற்றத்தால் இந்தியா இங்கிலாந்து இடையிலான உறவில் எந்த கேள்வியும் இல்லை. ஏனெனில், கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com