இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்வாகியிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பென்னி மோர்டான்ட் போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்ததை யடுத்து ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தற்போது 42 வயதான ரிஷி சுனக் லண்டனில் பிறந்தவர். லண்டன் வரலாற்றில் மிக இள வயது பிரதமரும் இவரே.
அவருக்கு பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ரிஷி சுனக் பிரதமராக ஓருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவது இதுவே முதல் முறை.
ரிஷி சுனக்கின் தாய், தந்தையர் இருவரும் வெளிநாட்டில் பிறந்தவர்கள். ஆனால் ரிஷி சுனக்கின் தாத்தா இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். அந்தவகையில் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியினராக கருதப்படுகிறார்.
முன்னதாக இங்கிலாந்து பிரதமர் லிஸ்டிரஸ் பதவியிலிருந்து விலகினார். அதையடுத்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் “பிரிட்டன் பொருளாதாரத்தை சரி செய்வேன் “ என்று தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக் இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.