உயரும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகள் ! சாமான்ய மக்களுக்கு பாதிப்பா?

உயரும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகள் ! சாமான்ய மக்களுக்கு பாதிப்பா?

இந்தியாவின் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்களில் சுமார் 900 மருந்துகளின் விலை தற்போது உயர்த்தப்படுகிறது. இவற்றின் விலை 12% சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார ஆலோசகரின் பரிந்துரைகளின் படி தற்போது மருந்துகளின் விலை உயர்த்தப்படுகிறது.

இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்யாவசிய பொருளான மருந்துகளின் விலையைக் கண்காணித்து வரைமுறை செய்கிறது.கடந்த சில மாதங்களாக மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டுமென மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% விலை உயர்த்த இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

தற்போது காய்கறி, உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என எங்கு பார்த்தாலும் விலையேற்றம்தான். போதாத குறைக்கு தங்கம் விலை வேறு ராக்கெட் வேகத்திற்கு உயர்ந்து வருகிறது. இப்படி பொதுமக்களின் பட்ஜெட்டில் துண்டைப் போடும் வகையில் இந்த விலை உயர்வுப் பிரச்சினை சாமானிய மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்த மறுத்து பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. குறைந்த விலைக்கு மருந்துப் பொருட்கள் கிடைப்பதால்தான் அவற்றைப் பொதுமக்கள் எளிதாக வாங்கிப் பயன்படுத்த முடிகிறது. ஆனால் அவற்றின் விலை இவ்வாறு உயர்த்தப்பட்டால் அதை வாங்கும் திறன் குறைந்து, பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com