உயரும் கடல் மட்டம்; எச்சரிக்கும் ஐ.நா. பொதுச்செயலர்!

உயரும் கடல் மட்டம்; எச்சரிக்கும் ஐ.நா. பொதுச்செயலர்!

லகம் வெப்பமயமாதல் காரணமாக துருவத்தில் உள்ள பனிப் பாறைகள் உருகுவதால் பூமியில் உள்ள அனைத்துக் கடல் மட்டங்களும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. ஆனால், மக்கள் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இயற்கை விரோதப் போக்குகளையே கடைபிடித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இயற்கைச் சீற்றங்களையும் இந்த உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதுகுறித்து, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ‘கால நிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக கடல் மட்டம் வெகுவாக அதிகரிக்கக் கூடும். இதனால் உலகம் முழுக்க உள்ள கடலோரப் பகுதிகளில் வாழும் 90 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடல் மட்ட உயர்வின் காரணமாக இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பலவும் பெருத்த ஆபத்துக்கு உள்ளாகும். கடற்கரைகள் அழிவால் பிரதேசங்கள் இழக்கப்பட்டு, வளங்கள் பற்றாக்குறையாகி, மக்களும் இடம் பெயர்வதால் பதற்றங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்’ என அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

கரீபியன் முதல் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆற்றுப் படுகைகள் வரை உலகம் முழுவதும் உள்ள பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் குறிப்பிட்டு பேசிய அவர், இந்த கடல் மட்ட உயர்வு என்பது நன்னீர், நிலம் மற்றும் பிற வளங்களில் கடுமையான போட்டிக்கு வழிவகுக்கும் என்றும், கடல் நீர் மட்ட உயர்வால் கெய்ரோ, பாங்காக், டாக்கா, ஜகர்த்தா, மும்பை, நியூயார்க் உள்ளிட்ட நகரங்கள் பலவும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் குட்ரெஸ் எச்சரித்துள்ளார். அதோடு, கடல்களில் இருந்து எழும் பேரழிவு தரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை உருவாக்க பாதுகாப்பு கவுன்சிலுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com