நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் உயரும் கட்டணம்; நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது!

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் உயரும் கட்டணம்; நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது!

இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. நடப்பாண்டிற்கான புதிய கட்டணங்கள் இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்ல கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதன் மூலம் ஏற்கனவே உள்ள கட்டணத்தில் குறைந்த பட்சம் 10 சதவீதம் உயரும். அதாவது குறைந்தது கூடுதலாக 15 ரூபாய் தரப்படவேண்டியிருக்கும்

தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. சென்ற ஆண்டு இலகு ரக வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணமாக 180 ரூபாய், மாதாந்திர கட்டணம் 5,330 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இவ்வாண்டு இன்னும் கூடுதலாக பத்து சதவீதம் உயரும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இரண்டு கட்டங்களாக கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. முதலில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள சுங்கச்சாவடிகளில் அடுத்த மாதம் உயர்த்தப்படும். 28 சுங்கச்சாவடிகளில், சுங்கக்கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலபட்டி, கரூர், வேலஞ்செடியூரில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் சேலம், ஓமலூர், நத்தக்கரை, வைகுண்டம், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தருமபுரி பாளையம், குமாரபாளையம், விஜயமங்கலம் ஆகிய இடங்களிலும் சுங்கக்கட்டணம் இன்றிரவு அமலுக்கு வருகிறது.

கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இனி 110 ரூபாயாக உயரக்கூடும். இது போக்குவரத்துக் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என்று பயணிகள் அச்சப்படுகிறார்கள். ஏற்கனவே அதிக கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் பேருந்துகள், கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் கட்டணங்களை உயர்த்தவே வாய்ப்பிருக்கிறது.

கைவிடப்பட்ட சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. அதில் இதுவரை எந்த முன்னேற்றமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com