Chandrayaan - 3 திட்டத்தில் இருந்த இந்தியாவின் ராக்கெட் வுமன். 

Chandrayaan - 3 திட்டத்தில் இருந்த இந்தியாவின் ராக்கெட் வுமன். 
Published on

ட்டுமொத்த இந்தியர்களின் ஆசை, கனவு, பெருமிதம் போன்றவற்றை சுமந்துகொண்டு சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவில் தரையிறங்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பின்னால் இருக்கும் இந்தியாவின் ராக்கெட் வுமன் பற்றி உங்களுக்குத் தெரியுமா? 

சந்திரயான் திட்டம் என்றதுமே நம்மில் பலருக்கும் முன்னாள் இஸ்ரோ தலைவரான கே.சிவன், தற்போதைய தலைவரான எஸ்.சோமநாத் மட்டுமே நினைவுக்கு வருவார்கள். ஆனால்,  சந்திரயான் 3 திட்டத்திற்குப் பின்னால் நாம் அறியாத ஒரு பெண் இருக்கிறார். அவர்தான் டாக்டர் 'ரித்து கரிதால் ஸ்ரீவஸ்தவா'. இந்தியாவின் ராக்கெட் வுமன் என அழைக்கப்படும் இவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவராக இருக்கிறார். 

இவர் சந்திரயான் 2 திட்டத்தின் இயக்குனராகவும், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் திட்டத்தின் துணை இயக்குனராகவும் இருந்தவர். லக்னோவில் பிறந்து வளர்ந்த ரித்து, அங்குள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் இயற்பெயலில் பிஎஸ்சி படித்தார். அதன் பிறகு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்கள் ME பட்டம் பெற்று, 1997 இல் இஸ்ரோவில் சேர்ந்தார். 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமிடம் இருந்து 'இஸ்ரோ இளம் விஞ்ஞானி' என்ற விருதையும் இவர் பெற்றுள்ளார். மேலும் ஏஎஸ்ஐ டீம் அவார்ட், உமன் அச்சீவர்ஸ் இன் தி ஏரோஸ்பேஸ், இஸ்ரோ டீம் அவார்ட் போன்ற விருதுகளையும் வென்றுள்ளார். விண்வெளி சார்ந்த விஷயங்களில் அதிகம் ஈர்க்கப்படும் இவர், எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பும் நபரும் கூட. இதனால் நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் ஜர்னல்களில் 20க்கும் மேற்பட்ட ரிசர்ச் பேப்பர்கள் பப்ளிஷ் செய்துள்ளார். 

ரித்து கரிதலின் பங்களிப்புடன், நிலவில் தென் துருவத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 திட்டம், இஸ்ரோவின் பெரிய ராக்கெட்டுகளில் ஒன்றான ஜிஎஸ்எல்வி மார்க் 3 உதவியுடன் வெற்றிகரமாக நேற்று விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால், சந்திரயான் 3ன் லேண்டர் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும். 

லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால், ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com