நோய் தாக்கத்தின் காரணமாக ரோஜா ஏற்றுமதி பாதிப்பு...

நோய் தாக்கத்தின் காரணமாக ரோஜா ஏற்றுமதி பாதிப்பு...

Published on

ரப்போகிறது காதலர் தினக் கொண்டாட்டங்கள். கூடவே காதல் மலரான ரோஜாப்பூகளுக்கு கிராக்கியும். அழகிய பூக்கள் கொண்ட பொக்கேகள் விற்பனையும். ஆனால் இந்த வருடம் ரோஜாக்களை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தங்கள் ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.

ஓசூர் பகுதிகளில் ரோஜா மலர்களின் சாகுபாடி அதிகம். தற்போது ரோஜாக்களில்  ஏற்பட்டிருக்கும் நோய் தாக்கத்தால் காதலர் தின கொண்டாட்டத்திற்கு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ரோஜா மலர்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சார்ந்த ஓசூர், தளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

இதனால் ஓசூர் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து  நல்ல லாபம் பார்த்து வந்தனர். ஓசூர், தளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  2500 ஏக்கர் பரப்பில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் டவுனிங் என்ற நோய் தாக்கம் ஏற்பட்டு ரோஜா மலர்களின்  உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நோய் தாக்கம் இருக்கும்போது பூக்கும் தரமற்ற ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பிரச்சனை ஏற்படும். இதனால் இந்த ஆண்டு ரோஜா ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது உலக சந்தையில் புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்படும் நிலையில் இந்தியாவில் தொடர்ந்து பழைய ரகங்களையே சாகுபடி செய்வதாலும்  வெளிநாடுகளில் இந்திய ரோஜாக்களுக்கு வரவேற்பு குறைந்துள்ளது.

ஆனாலும் உள்ளூர் சந்தையில் தற்போது ரோஜாக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது விவசாயிகளை ஓரளவு ஆறுதல் படுத்துகிறது. ஓசூரில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ரோஜா மலர்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உள்ளூர் சந்தையில் ரோஜா மலர் விற்பனை அதிகரித்து உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். ஏற்கனவே அரசு இப்பகுதியில் அமைத்துக் கொடுத்துள்ள மலர் விற்பனை மையம் மற்றும் மானியம் போன்ற சலுகைகள் காரணமாகவே இந்த அளவிற்கு மலர் உற்பத்தியாளர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com