ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு விற்பனை 26% உயர்வு!

Published on

ருசக்கர வாகனங்களில் கம்பீரமாக காட்சியளிக்க கூடியதும், விலையில் உயர்ந்ததாகவும் கருதப்படும் ராயல் என்ஃபீல்ட் இந்தியாவில் அன்று முதல் இன்று வரை பெருமைக்குரிய வாகனமாக கருதப்படுகிறது. இதனாலையே இந்தியாவில் அதன் விற்பனையும் அதிகம்.

இந்நிலையில்,ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான மொத்த உற்பத்தி 61,407 இருந்தது. தற்போதைய 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான விற்பனை 77,109 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் 26% விற்பனை அதிகரித்துள்ளது.

உள்நாட்டு விற்பனையில் 2022 ஆம் ஆண்டு 50,265 என்று இருந்த நிலையில் தற்போது 67, 495 என்று உயர்ந்திருக்கிறது. இது 36 சதவீத உயர்வாகும். இதனால் இந்த நிதியாண்டை கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த நிதியாண்டில் லாபமும் அந்நிறுவனத்திற்கு அதிகரித்திருக்கிறது.

அதேநேரம் ஏற்றுமதியில் கடந்தாண்டை ஒப்பிடும் பொழுது 11, 142 இருந்த ஏற்றுமதி தற்போது 9,614 என்று குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது. அதே நேரம் இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட் பைக்கை விரும்புவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com