ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் புல்லட் வகை பைக்குகளை வாடகைக்கு விட முடிவு செய்து இருக்கிறது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்தியாவில் ஆடம்பர இருசக்கர வாகனமாக இருக்கிறது. இதனாலையே பலரும் ராயல் என்ஃபீல்ட் பைக் வாங்க ஆசைப்படுகின்றனர். இப்படி முன்பு ஒரு சிலர் மட்டும் பயன்படுத்தி வந்த புல்லட் பைக்குகள் என்று அனைத்து தரப்பினரும் வாங்க தொடங்கி இருக்கின்றனர்.
அதே நேரம் ஒரு ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கின் விலை ஒன்றரை லட்சத்திற்கும் மேல் அதிகமாக இருப்பதால், லோனை போட்டாவது வாங்க வேண்டும் என்று இன்றைய இளைஞர்கள் ஆசையில் உள்ளனர்.
இதனாலேயே ராயல் என்ஃபீல்டுக்கான மார்க்கெட் எப்பொழுதும் முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில் ராயல் என்ஃபீல்டை வாங்க முடியாத ஏழை எளிய மக்கள் மத்தியிலும் புல்லட் பைக்குகளை கொண்டு செல்லும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்த ராயல் என்ஃபீல்ட் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
இவ்வாறு ராயல் என்ஃபீல்ட் பைக்குகளை வாடகைக்கு வழங்க முடிவு செய்து இருக்கிறது. மாடலுக்கு ஏற்றார் போல் வாடகை தொகைகள் நிர்ணயிக்கப்படும். மேலும் முதல் கட்டமாக சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் சோதனை முறையில் இத்திட்டத்தை செயல்படுத்த ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
மேலும் லடாக் செல்லும் இளைஞர்கள் பலரும் ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய திட்டத்தால் இனி லடாக் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக் எளிதாக கிடைத்துவிடும்.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தினுடைய இந்த புதிய திட்டம் இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியாக மாறி இருக்கிறது. ஏனென்றால் ராயல் என்ஃபீல்ட் நிறுவன பைக்குகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளவே இளைஞர்கள் பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதை வாடகைக்கு அளிப்பதன் மூலம் மற்ற வாகனங்களினுடைய விற்பனை குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.