ரயிலை மறித்து நின்றுக்கொண்டிருந்த ராயல் அன்னப்பறவையை எதுவும் செய்ய முடியாமல் மக்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர் . இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் இந்த பறவையை எதுவும் செய்யாமல் இருந்ததற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உள்ளது. அது என்ன காரணம் என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
அன்னப்பறவையின் அழகை பல கவிதைகளில் நாம் உவமைப்படுத்தி கேட்டிருப்போம். அதன் அழகு ஒரு பக்கம். மற்றொரு பக்கம் அன்னப்பறவை எப்போதும் தன் வாழ்வில் ஒரு துணையையே வைத்துக்கொள்ளும். இதனால் அன்னப்பறவையின் மேல் பலர் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்டனர். அந்தவகையில் 1247ம் ஆண்டு மன்னன் ஹென்ரி 3 தனது செல்வத்தைக் காண்பிக்க கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று 40 அன்னப்பறவையை சமைத்து பக்கத்து நாட்டு மன்னர்களை அழைத்து விருந்தளித்தார்.
இது நாடுகளிடையே யார் செல்வந்தர்கள் என்ற போட்டியை வரவழைத்தது மட்டுமில்லாமல் ஆளாளுக்கு அன்னப்பறவைக் கொன்று சாப்பிட ஆரம்பித்தார்கள். அதன்பின்னர் 1500களில் அரசி எலிசபெத் அன்னப்பறவைகளை வளர்ப்பதற்கான உரிமம் எங்க வாரிசுக்கு மட்டும்தான் என்று கூறியதோடு அதனை சுதந்திரமாக நீரில் விடும் உரிமத்தையும் பெற்றார். இதன்பிறகு வெளியில் அன்னப்பறைவை யார் கண்டாலும் அது ராணியுடையது என்று கூறி எதுவும் செய்யாமல் விட்டுவிவர்.
அன்றிலிருந்து எலிசபத் அரசியின் வம்சத்தில் இருப்பவர்கள் மட்டும்தான் அன்னப்பறவையை வேட்டையாட முடியும், சாப்பிட முடியும், வளர்க்க முடியும். மற்ற யார் அதனை தொட்டாலும் கடும் தண்டனை வழங்கப்படும். இந்நிலையில் தற்போது பறவைகள், விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அன்னப்பறவைகளைக் கொல்லக்கூடாது என்று விதிமுறை விதிக்கப்பட்டது. அந்தவகையில் அன்னப்பறவை பாதுகாப்பாக இருந்தாலும் இன்னும் அது ராஜ வம்சத்தின் சொத்தாகவே கருதப்படுகிறது.
அந்தவகையில் ரயிலை மறித்து வெகு நேரம் நின்ற ராயல் அன்னப்பறவையைத் தொட, ரயில் நிலைய அதிகாரிகளுக்குக் கூட துணிவு வரவில்லை. மக்களும் நேரம் செலவானாலும் பரவாயில்லை என்று அதன் அழகை ரசித்துக்கொண்டு நின்றனர். வெகுநேரம் அனைத்தையும் பார்த்து நின்றுக்கொண்டிருந்த அன்னப்பறவையும் சிறிது நேரத்தில் சலிப்போடு அதுவாகவே பறந்து சென்றது.
வரலாற்றில் அன்னப்பறவைகளைக் கொடூரமாக கொன்று உணவாக எடுத்துக் கொண்டனர். எலிசபத் அரசியின் உரிமமும் விலங்குகள் பாதுகாப்பு சட்டமும் சேர்ந்து அன்னப்பறவையின் சுதந்திரத்தைக் காப்பாற்றியுள்ளது என்றே கூற வேண்டும்.